தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்..?? வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்..? என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதற்கிடையே வரும் 16ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையில், தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா..? வேண்டாமா..?என்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுமா..?? இல்லையா..?? என்பது போன்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், நவம்பர் 16ம் தேதி முதல் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுமா..? இல்லையா..? என்பது குறித்து வரும் 12ம் தேதி முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.