Breaking News, Cinema

நடிகர் விஜய்யை ரூட் விட்ட கல்லூரி சீனியர் பெண்! நண்பர் பகிர்ந்த சுவாரசிய தகவல் 

Photo of author

By Vijay

நடிகர் விஜய்யை ரூட் விட்ட கல்லூரி சீனியர் பெண்! நண்பர் பகிர்ந்த சுவாரசிய தகவல்

நடிகர் விஜய்யை பிடிக்காத நடிகைகளே இல்லை. அப்படியிருக்கையில் விஜய்க்கு பிடித்த கல்லூரி காலத்து பெண். யார் அந்த பெண்? விஜய்யின் நண்பர் பகிர்ந்த சுவாரஸ்ய பகிர்வு…

தமிழ் சினிமாவின் தற்போது முன்னனி நடிகராக இருக்கும் விஜய் பல வெற்றி படங்களை கொடுத்தவர். அவர் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகள் அனைத்தும் திருவிழா போன்று காட்சியளிக்கும். மேலும் அவரது படங்கள் அனைத்தும் மிகப்பெரும் வசூல் சாதனைகளை புரியும். ஏன் அவர் படத்தின் முன்னோட்டம் வந்தால் கூட பல பார்வையாளர்களை பெற்று சாதனை புரியும்.

மேலும் இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க பல முன்னணி நடிகைகள் ஆர்வமாக உள்ளனர். இவருடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் சிலபேர் சினிமாவிலும் இருக்கிறார்கள். அதில் நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகரும் இயக்குனருமான ஸ்ரீநாத்.

இவர்கள் இருவரும் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள். இவ்விருவரும் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார்கள். மேலும் சஞ்சீவ் அவர்கள் விஜய்யை பற்றி அதிகமான சுவாரஸ்ய செய்திகளை பகிர்ந்து கொள்வார். அந்தவகையில் அவர்களின் கல்லூரிகால நிகழ்வுகளையம் அடிக்கடி பகிர்வார்

அப்படியிருக்கையில் நடிகர் ஸ்ரீநாத் அவர்கள் கல்லூரி காலங்களில் நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்துள்ளார். அவர் படிக்கும் காலங்களில் அவருடைய சீனியர் பெண்னை விஜய்க்கு மிகவும் பிடிக்குமென்றும் அந்த பெண்ணின் பெயர் அஞ்சலி என்றும் குறிப்பிட்டார்.

ஒருமுறை ஸ்ரீநாத் அவரது நண்பர்களும் சென்று கொண்டிருக்கும் போது அஞ்சலி அவர்களை ராகிங் செய்தாராம். அப்போது விஜய் அவர்களை மட்டும் ராகிங் செய்யவில்லையாம். இதனால் விஜய் அஞ்சலி என்னை மட்டும் ராகிங் செய்யவில்லையென்று காமெடியாக புலம்பினாராம்.இதை ஒரு நேர்காணலில் ஸ்ரீநாத் அவர்கள் கலகலப்பாக கூறி இருந்தார்.

ரஜினி கமல் படங்களில் நான் நடிக்க மாட்டேன்! உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை!

2 நிமிடத்தில் தொண்டை கட்டுக்கு தீர்வு வேண்டுமா? அப்போ “இஞ்சி + பட்டை” இப்படி பயன்படுத்துங்கள்!!