பெண்களே உஷாராக இருங்க! மார்பிங் செய்த புகைப்படத்தால் கல்லூரி மாணவி தற்கொலை!

Photo of author

By Kowsalya

சமூக வலைத்தளத்தில் தனது மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படம் வெளியானதால் 20 வயதான கல்லூரி பயிலும் மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் 20 வயதான மாணவி செங்கல்பட்டை அடுத்த வெம்பாக்கம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். அதேபோல் தனது புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வந்துள்ளார்.

இவரை பின்பற்றும் யாரோ ஒரு நபர்கள் இவரின் புகைப்படங்களை சிலவற்றை மார்பிங் செய்து மற்றொரு வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த மாணவி யோடு சேர்த்து இன்னொரு மாணவனின் புகைப்படமும் மார்பிங் செய்யப்பட்ட வெளிவந்துள்ளது. இதனால் இந்த மாணவி அந்த மாணவரை கேட்டபொழுது புகைப்படத்தை நான் பதிவேற்றி வில்லை என்று கூறியுள்ளார்.

எப்பொழுதும் சமூக வலைதளங்களை பொழுதை போக்கும் மாணவியை குடும்பத்தார் எச்சரித்து வந்த நிலையில் இந்த மாதிரியான சம்பவம் அந்த மாணவிக்கு மாபெரும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் இது நம் பெற்றோரை அவமானப்படுத்தும் என்று அஞ்சி உள்ளார்.

இதனால் மிகவும் மனமுடைந்த மாணவி ஞாயிற்றுக்கிழமை யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார். மாணவியை காணாததை அடுத்து அவரது குடும்பத்தினர் தேடியதில் பாழடைந்த கிணற்றில் இறந்து கிடந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். மேலும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த புகைப்படம் குறித்து மாணவியின் நண்பர்களின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையாக அவரது நண்பர்களில் யாரோ தான் இதை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புகைப்படங்கள் பதிவேற்றப்பட்ட வலைதள கணக்கை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்றுக் கொண்டு வருகிறது. வளர்ந்து வரும் இந்த நாகரீக காலத்தில் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.