திரும்பி வந்த போது, கேன் மட்டும் மேலே மிதந்து கொண்டிருந்தது! சேலத்தில் நடந்த சோகம்!

Photo of author

By Kowsalya

திரும்பி வந்த போது, கேன் மட்டும் மேலே மிதந்து கொண்டிருந்தது! சேலத்தில் நடந்த சோகம்!

சேலம் அருகே தனது தாத்தாவுடன் நீச்சல் பழகச் சென்ற கல்லூரி மாணவன் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் 19 வயது நிரம்பிய கல்லூரி மாணவர் நீச்சல் பழக ஆசை கொண்டு கிணற்றில் மூழ்கி இறந்துள்ளார்.

நீச்சல் பழக அந்த மாணவனும் அவரது தாத்தாவும் அருகே காரைக்குடி என்ற பகுதி கிணற்றுக்கு சென்றுள்ளனர்.நீச்சல் கற்பிக்க அவரது தாத்தா அவரது முதுகில் கேனை கட்டிவிட்டு நீச்சல் பழகி கொண்டிருந்துள்ளார்.

அந்த மாணவன் நன்றாக நீச்சலடித்து கொண்டிருக்க அப்படியே நீச்சலடித்து கொண்டிரு வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று சொல்லி தாத்தா அவனை தன்னந்தனியாக விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்த பொழுது கேன் மிதந்து கொண்டிருந்த நிலையில் மாணவனை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் நிலையத்திலும் தீயணைப்பு காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு காவலர்கள் தேடும் பணியை தீவிரமாக செய்து வருகின்றனர். தண்ணீர் ஆழம் அதிகமாக இருப்பதனால் தேடுவதில் சிரமம் ஏற்பட்டு தேடி வருகின்றனர்.

பின் அருகிலுள்ள காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் கழுத்தில் கட்டப்பட்டுள்ள கேன் கழன்று மாணவன் மூழ்கி இருந்துள்ள வாய்ப்பு உள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அங்குள்ள மக்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.