கல்லூரிகளில் இனி இது இல்லை என்றால் சேர முடியாது?உயர் அதிகாரி சன்யம் பரத்வாஜ் வலியுறுத்தல்!!..
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2021மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கி ஜீன் மாதம் 10 ஆம் தேதி முடிவடைந்தது.கொரோனா தோற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படமால் ஆன்லைன் மூலமே பாடங்கள் அனைத்தும் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் சி.பி.எஸ்.இ யின் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன.இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகள் என பலர் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் சேர்வதற்காக செல்கின்றனர்.அதன்படி சில பல்கலைகழகங்களில் மாணவர்களிடம் அச்சிடப்பட்ட நகல் மற்றும் காகித வடிவ மாற்று சான்றுகளை கட்டாயமாக வழங்குமாறு தகவல்கள் பரவி வருகிறது.
அதன்படி இது தொடர்பாக சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பட்டு உயர் அதிகாரி சன்யம் பரத்வாஜ் கூறியிருப்பதாவது,பொதுவாக அச்சிடப்பட்ட சான்றுகளை மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ உடனடியாக வழங்கி விடும்.இருந்தாலும் மாணவர்களின் டிஜிலாக்கரில் இடம்பெற்றுள்ள மின்னணு வடிவிலான மதிப்பெண் மற்றும் தேர்ச்சி சான்றுகளை மற்றும் மாற்று சான்றுகள் ஆகியவை தேர்வு கட்டுப்பட்டு அதிகாரியின் மின்னணு கையெழுத்துடன் உள்ளன.
அவையும் சட்ட ரீதியாகவும் செல்லக்கூடியவை.எனவே இத்தகைய சூழ்நிலையில் அந்த மின்னணு சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அவர் கூறினார்.மேலும் மாணவர்களின் கல்வியை கருதி இந்த கருத்தினை ஏற்று விரைவில் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.