நாளை முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி:! உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

0
120

நாளை முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி:! உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பொதுப் போக்குவரத்து உட்பட அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் முடக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்,நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு சில மாநிலங்களில் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் இயங்க உயர்கல்வித்துறை அனுமதியளித்துள்ளது. மேலும் நாளை முதல் அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை படிப்பிற்கான இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் சென்னை ஐஐடி போன்ற ஒரு சில இடங்களில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதால், சமூக இடைவெளியை பின்பற்றுதல்,முகக் கவசம் அணிதல்,அடிக்கடி கைகளை கழுவுதல்,போன்ற கொரோனா விதிகளை கடுமையாக கடைபிடிக்க மாணவர்களுக்கு உயர்க் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி மத்திய சுகாதார அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டுமென்று உயர்கல்வித் துறை மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Previous articleஇந்த ராசிக்கு இன்று கடன் சுமை தீரும்! இன்றைய ராசி பலன் 16-12-2020 Today Rasi Palan 16-12-2020
Next articleகவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:! அதிர்ச்சியில் ரசிகர்கள்!