கன்னடப் படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே . இவர் கோமாளி, பப்பி, வாட்ச்மேன் போன்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் நடித்து மக்களைக் கவர்ந்தார். மேலும் கன்னட பிக்பாஸில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.
https://www.instagram.com/p/COfs0hwNK8H/?utm_medium=copy_link
பெங்களூரில் வசித்து வரும் இவரது பெற்றோர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. . அப்பொழுது அவர் ” என் பெற்றோர்கள் தான் எனக்கு உலகம் அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் பெற்றோர்கள் மிகவும் வயதானவர்களாக இருந்ததால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் தனிமை படுத்தி அவரை கவனித்து வந்துள்ளார்.
மருத்துவரின் ஆலோசனைப்படி அவர்களை தனிமைப்படுத்தி தாமே கவனித்து வந்துள்ளார்.
பெற்றோர்களின் உடல்நிலை தேறி வரும்பொழுது சம்யுக்தா ஹெக்டேவிற்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, உங்களது பிரார்த்தனைகளின் மூலம் எனது பெற்றோர்கள் நலம் பெற்று வருகிறார்கள். இப்பொழுது எனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. அதை நான் பாசிட்டிவாக எடுத்துக் கொள்கிறேன். என் பெற்றோர்களுக்கு குணமடைந்த தே எனக்கு புது உலகத்தில் பிரவேசிப்பது போலிருந்தது. நானும் பூரண நலம் பெறுவேன் என்று அவர் கூறியிருந்தார்.
சம்யுக்தாவிற்கு ரசிகர்கள் நம்பிக்கையூட்டி வருகிறார்கள்.