புத்தகத்தோடு வீட்டிற்கு வா! ஆசை இருந்தால் பேசு! ஆபாச பேச்சு! சிக்கிய ஆசிரியர்!

0
185

ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்று வெளியான சம்பவத்தை அடுத்து அவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹபிப் என்ற அறிவியல் ஆசிரியர் 13 வயது மாணவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார். புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வா, என்று பள்ளி மாணவிகளை தன் வீட்டிற்கு அழைத்து தவறாக பேசிய ஆடியோ வெளியானதால், அவரை தற்போது போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆசிரியர் போர்வையில் இதுபோன்ற கேவலமான கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி அங்கு அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் 13 வயது மாணவிகள் படிக்கும் வகுப்புக்கு ஹபீப் அறிவியல் ஆசிரியராக இருந்தார். தனது வகுப்பு மாணவிகள் ஒரு சிலரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு ஆபாசமாக மாணவிகளுடன் பேசத் தொடங்கியுள்ளார்.

என் பேச்சைக் கேட்டு வரவேண்டும். இல்லை என்றால் தேர்வில் தோல்வி அடைய வைத்து விடுவேன் என்று மாணவர்களை மிரட்டி ஆபாச லீலைகளை மாணவிகளிடம் அரங்கேற்றியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்படி அடிப்படையில் அறிவியல் ஆசிரியர் ஹபீப்பை போலீசார் கைது செய்தனர்.

போக்சோ சட்டத்தில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஹபீப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் கொடுக்க எண்களை தெரிவித்துள்ளனர். மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க ரகசிய எண்ணை போலீசார் அறிவித்தனர்.

ஹபீபால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் 9443282223, 9498207461, 9489207461 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், மாணவிகள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மாணவிகளுடன் ஆபாசப் பேச்சு பேசி ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் ஹபீபை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அதேபோல் பணியிலிருந்து நீக்கம் செய்துள்ளனர். ராமநாதபுரம் முதன்மை கல்வி ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பணி இடை நீக்கம் செய்துள்ளார்.

Previous articleஇந்த ராசிக்கு உங்களுக்கு புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்! இன்றைய ராசி பலன் 24-06-2021 Today Rasi Palan 24-06-2021
Next articleகாலையில் வெறும் வயிற்றில் தேன் சாப்பிடுவதால் என்ன நடக்கும்?