ADMK: சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக தன்னை இளைஞர்கள் அப்பா என்று அழைப்பதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது ரீதியாக தற்போது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்தவகையில் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுக தொகுதிவாரியாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடலூர் மாவட்டம் புவனகிரியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனத்தை வழங்கினார்.
மேற்கொண்டு அவர் அந்நிகழ்ச்சியில் பேசியதாவது, யாருக்காவது சூடு சொரணை வெட்கம் இருந்தால் தமிழக முதல்வரை அப்பா என்று கூப்பிட முடியுமா பெற்ற குழந்தை கூட அம்மா என்று தான் அழைக்கும் அப்பா என்று எப்படி சொல்லும் என்று ஆவேசமாக பேசினார்.அதேபோல அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் நீங்கள் ஆயிரம் இல்லை 1500 ரூபாய் பெற்றி றுப்பீர்கள். அது மட்டுமா இலவசமாக வருடத்திற்கு ஆறு சிலிண்டர்களும் வந்திருக்கும். இதனை நீங்கள் தான் தவற விட்டு விட்டீர்கள். அதுமட்டுமின்றி தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தையும் இழந்துள்ளீர்கள்.
மீண்டும் மறைந்த முதல்வர் அம்மா வழியில் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென கூறியுள்ளார். இவர் தமிழக முதல்வரை அப்பா என்று அழைப்பவர்கள் சூடு சொரணை அற்றவர்கள் என்று பேசியது சோசியல் மீடியாவில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியானது எம்எல்ஏ அருள் மொழி தேவன் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.