நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
162
Comedian Senthil gets corona infection! Shocked fans!
Comedian Senthil gets corona infection! Shocked fans!

நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலத்தை கடந்து தற்போது இந்த வருடமும் 2 வது அலையாக கோரத்தாண்டவம் ஆடுகிறது.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பீதியடைந்துள்ளது.தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு போட்டு வந்தாலும் இந்த தொற்று ஒரு பக்கம் மின்னல் வேகத்தில் பரவி கொண்டு தான் வருகிறது.பல அரசியல் தலைவர்கள்,நடிகர்கள் என அனைவருக்கும் தொற்று பரவி உள்ளது.

இந்த நிலையில் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தவகையில் திமுக ஸ்டாலினின் தங்கை மற்றும் மகளிரணி செயலாளரான கனிமொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி அனைத்து துறைகளிலும் கலக்கும் மற்றும் பெண்களின் சாக்லெட் பாய் என்று அழைக்கப்படும் மாதவன் வீட்டில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கடுத்து பிரபல ஹாலிவுட்  நடிகை ஆலியா பட்டுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனால் அவர் வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாக கூறினார்.அதனைத்தொடர்ந்து ஹாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது,எனக்கு கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதனால் மருத்துவ விதிமுறைகளை கடைப்பிடித்து தன்னை வீட்டினுள்ளே தனிமை படுத்திக் கொண்டேன் என்றார்.

அதற்கடுத்து நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்றானது பாதித்து தற்போது குணமடைந்து சூர்யா 40 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜோதிகாவின் அக்காவான நக்மாவிற்கும் கொரோனா உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கடுத்து குஷ்பூவின் கணவர் மற்றும் இயக்குநருமான  சுந்தர்.சி க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கடுத்ததாக அக்காலம் முதல் இக்காலம் வரை நகைச்சுவையின் ஜாம்பவானான நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.நடிகர் செந்தில்,அவரது மனைவி,மகன் மற்றும் மருமகள் என அனைவருக்கும் கொரோனா தொற்றானது உறுதியாகி உள்ளது.கொரோனா தொற்று உறுதியானதால் நகைச்சுவை நடிகர் செந்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் சமீபகாலத்தில் பாஜக கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் பண பரிவர்த்தனை செயல்படாது! ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
Next articleபந்தை நாளா திசைக்கும் பறக்கவிட்ட கிறிஸ் கெய்ல்… ஐ.பி.எல். வரலாற்றில் புதிய மைல்கல்!