Actor Vivek: காமெடி நடிகர் விவேக் மரணம் தொடர்பாக அவரது மனைவி கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.
தமிழக திரைத்துறையில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் விவேக். தனது காமெடி வாயிலாக பகுத்தறிவு சிந்தனையையும், முற்போக்கு சிந்தனைகளை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர். இவர் தனது 59வது வயதில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 தேதி உயிரிழந்தார். இவரது இறப்புக்கு முந்தைய நாள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு கொண்டார்.
கொரோனா நோய் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு பரவத்தொடங்கியது. அதன் பிறகு அந்த நோய் பரவலை தடுக்க “லாக் டோவ்ன்” நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு கொரோனா நோய்க்கான தடுப்பூசிகளை மக்கள் போட்டுக் கொள்வதற்காக பயப்பட்டு கொண்டு இருந்தார்கள். அப்போது தமிழக நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்த நாளே உயிரிழந்தார்.
இச் செய்தி மக்கள் இடத்தில் தடுப்பூசி குறித்து மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. தற்போது விவேக் மரணம் குறித்து அவரது மனைவி கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய விவேக் மனைவி முதல் பொதுமக்கள் போல கொரோனா தடுப்பூசி மீது எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் விவேக் இருந்தார். அப்போது, அவர் பட பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதானால் தடுப்பூசி செலுத்த வேண்டிய கட்டாயம் நிலை ஏற்பட்டது. எனவே ஊடகவியலாளர் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மக்களுக்கு அதன் மீது இருக்கும் அச்சம் விலகி நம்பிக்கை வரும் என முடிவு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால் அடுத்த நாளே அவர் இறந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பிறகு தடுப்பூசி மீது மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. பிறகு மீண்டும் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என கூறி இருந்தார்.