வட கொரியா நாட்டின் அதிபர் செய்த காமெடி செயல்!! என்னனு நீங்களே பாருங்க!!
இந்த உலகிலேயே மிக பெரிய மைதானம் எங்கு உள்ளது என்று தெரியுமா? இந்த உலகிலேயே மிகப் பெரிய மைதானம் வடகொரியாவில் உள்ளது. இந்த மைதானத்தின் பெயர் ருங்கிரடோ ஃபர்ஸ்ட் ஆப் மே ஸ்டேடியம். அந்த ஒரு ஸ்டேடியத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1,14,0000 பேர் உட்கார முடியும் என்று கூறுகிறார்கள். மேலும் இந்த மைதானம் 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று கூறுகிறார்கள். அந்தக் காலகட்டத்திலேயே இவ்வளவு பெரிய மைதானத்தை எதற்காக கட்டினார்கள் என்றால் அவர்கள் நாட்டின் வலிமையை வெளிப்படுத்தவே இவ்வளவு பெரிய மைதானத்தை கட்டியுள்ளார்களாம்.
மேலும் வட கொரியா என்றாலே தங்களுக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கிக் கொள்வார்கள். இவர்களுக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என்று செய்த விடயம் ஒன்று இந்த உலகத்தையே பயங்கரமான சிரிப்பில் ஆழ்த்தியது. அப்படி அது என்ன விடயம் என்றால் டைம் ஜூன் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதாவது டைம் ஜூன் என்றால் இந்தியாவில் பிளஸ் 5.30 மணி நேரம் என்று இருக்கும். அது போல கொரியாவிலும் வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு என பொதுவாக ஒரு டைம் ஜூன் உள்ளது.
இதை வடகொரியா பிரசிடென்ட் வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் எப்படி ஒரே மாதிரியான டைம் ஜுன் இருக்கும் என்றும், நாங்கள் எப்பொழுதுமே தனித்துவமாக தான் இருப்போம் என்றும் இந்த டைம் சோனை தனியாக பிரித்து அரை மணி நேரத்திற்கு முன்பாக வைத்து அதை பியொங்யாங் டைம் என்று பெயர் வைத்து கொண்டாராம். மேலும் இதை பார்த்து உலகமே வியப்பில் இருந்தது. ஆனால் வடகொரியா பிரசிடெண்ட் அதை கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காமல் மூன்று வருடமாக அதை கடைப்பிடித்து வந்தார். ஆனால் அதை அதற்குமேல் கடைப்பிடிக்க முடியவில்லையாம். ஏனென்றால் உலகமே ஒரு நேரத்தில் சுழலும் பொழுது இவர் மட்டும் வேறு ஒரு நேரத்தில் ஓடிக் கொண்டிருந்ததால் இந்த ஒரு விடயம் வடக்கு மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதை மேலும் கடைப்பிடிக்க முடியாது என்று அதை கைவிரித்து விட்டாராம். இந்த ஒரு விடயம் உலக அளவில் வைரலாகி அனைவருக்கும் சிரிப்பை உண்டாக்கியது.