தளபதி 65 படத்தின் அடுத்த அப்டேட்! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!

0
190
Commander 65 movie next update!
Commander 65 movie next update!

தளபதி 65 படத்தின் அடுத்த அப்டேட்! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!

தளபதி படத்திற்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா தொற்றால் 7 மாதங்களுக்கு மேல் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அந்தவகையில் தல மற்றும் தளபதி என ஆரம்பித்து எந்த பெரிய நடிகர்களின் படமும் திரையரங்குகளில் வெளியிடாமல் இருந்தது.அனைவரும் ஆவலாக எப்போது திரையரங்குகள் திறப்பார்கள் என காத்திருந்தனர்.

ஊரடங்கு சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்ததும் அனைத்து பொழுதுபோக்கு தளங்களும் திறக்க அனுமதி கொடுத்தனர்.அப்போது மக்கள் அனைவரும் எதிர் பார்த்தஅந்த நாள் வந்தது.சென்ற வருட தீபாவளிக்கு ரீலிஸ் செய்ய வேண்டிய விஜயின் மாஸ்டர் படம் கொரோனாவால் தாமதம் ஆகி தற்போது பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டது.அதன்பின் மக்கள் அனைவரும் முந்திக்கொண்டு தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்தனர்.

தாமதமாக ரிலீஸ் செய்யப்பட்டாலும் படத்தின் வசூல் வேட்டை சிறிதளவும் குறையவில்லை.அதனையடுத்து தளபதியின் 65 படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.விஜயின் 65 படமாக இந்த படத்தை இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க உள்ளார்.பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.இந்த படத்தின் நடன மாஸ்டராக ஜானி இணையை உள்ளார். இவர் குலேபகாவலி,மாரி2,நம் வீட்டு பிள்ளை,பட்டாஸ்,ஆகிய தமிழ் படத்திற்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.அப்போது இந்த படத்திலும் அனல் பறக்கும் நடனம் உள்ளது என எதிர் பார்க்கப்படுகிறது.நடன மாஸ்டர் ஜானி தனது சமூக வலைத்தளபக்கத்தில் கூறியிருப்பது,என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தற்கு நன்றி.இந்த வாய்ப்பை மதிப்பு நிறைந்த ஒன்றாக மாற்றுவேன் என்றார்.

அதுமட்டுமின்றி இந்த பாடலுக்கான ரிகர்சல் ஏப்ரல் 26 ஆம் தேதி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மே 3 முதல் மே 9 வரை இந்த பாடலுக்கான படபிடிப்பு நடக்கும் என அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.