இந்திய நடிகர்களின் சாதனையை முறியடித்த தளபதி விஜய்!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை அமைத்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சமீபத்தில் அவர் இந்திய நடிகர்கள் அனைவரின் சாதனையை முறியடித்து இந்தியாவிலேயே no 1 நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது வரும் விஜயின் படங்கள் மொழி கடந்து வட இந்தியாவிலும் நல்ல வசூல் செய்து வருகிறது.அதுமட்டுமின்றி தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விஜயின் படங்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது.

தமிழகத்தில் வசூல் சாதனையில் தற்சமயம் நம்பர் 1 நடிகராக இருப்பது தளபதி விஜய் தான். அதேபோல் சமூக வலைத்தள சாதனைகளிலும் NO 1ஆக இருந்து வருகிறார். அந்த வகையில் இந்திய நடிகர்களை மிரண்டு போகும் அளவுக்கு ஒரு சாதனையே செய்துள்ளார் விஜய்.

விஜய் செய்துள்ளார் என்று கூறுவதைவிட அவரது ரசிகர்கள் அவருக்கு இந்த சாதனையை செய்து கொடுத்திருக்கின்றனர் என்று கூறினால்தான் அது பொருந்தும். விஜய் மாஸ்டர் படப்பிடிப்பின்போது நெய்வேலியில் அவரைப் பார்க்க ஏராளமான கூட்டம் கூடியது. அந்த கூட்டத்தில் தளபதிவிஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபி காட்டுத்தீ போல் பரவியது.தற்போது அந்த புகைப்படம் டுவிட்டரில் இதுவரை எந்த ஒரு இந்திய நடிகரும் செய்யாத சாதனையை செய்துள்ளது. அந்த புகைப்படத்திற்கு 144.3 k ரீட்வீட், 33.1k Quote tweets,356k likes கிடைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு புகைப்படமும் இவ்வளவு ரீட்வீட் பெற்றது இல்லையாம்.தளபதி ரசிகர்கள் இதனை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.