21 ஆண்டுகளுக்கு முன் முதல்வன் படத்தில் நடிக்க மறுத்த தளபதி விஜய்!  ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர் சங்கர்!

1999 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் முதல்வன்.இந்தப் படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக மனிஷா கொய்ராலாவும் ரகுவரன்,மணிவண்ணன், விஜயகுமார் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். அப்படத்தின் பாடல்களும் ஹிட் அடித்தது.

பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தப் படம்  பாக்ஸ் ஆபீஸில் கோடிக்கணக்கில் பணத்தை குவித்து கொட்டியது.ஷங்கர் ஒரு மாஸ் டைரக்டராக இந்த படம் தான் காரணம் என்றே கூறலாம். இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

21 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்தில் விஜய் நடிக்க மறுத்த காரணத்தை வெளியிட்டு விஜய் ரசிகர்களை உச்சுக் கொட்ட வைத்துள்ளார்.முதல்வன் படத்தில் முதலில் லீடிங் ரோலில் நடிக்க ஷங்கரின் சாய்ஸ் விஜய்தானாம். ஆனால் அது வொர்க் அவுட் ஆகாததால் தன்னுடைய ஜென்டில்மேன் ஹீரோவான அர்ஜுனை நடிக்க வைத்தார் சங்கர் .

இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. முதல்வன் முதல்வன் படத்திற்காக விஜய் நடிக்க ஷங்கர் தன்னுடைய அசோசியேட் மூலமாக விஜயின் தந்தையை அணுகியுள்ளார். ஆனால் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சரியாக நடக்கவில்லை என்பதால் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார் விஜய். 21 ஆண்டுகளுக்கு முன் முதல்வன் படத்தில் நடிக்க மறுத்த தளபதி விஜய்!  ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர் சங்கர்!

பின்னர் ஏ எஸ்  சந்திரசேகர் தனது மகன் சிறந்த வாய்ப்பை  இழந்தததை பற்றி கவலைப்பட்டு சங்கரிடம் நேரடியாக விவாதித்து இருக்கலாம் என்று கூறினாராம்.  இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் தளபதி நல்ல வாய்ப்பினை  மிஸ் பண்ணிட்டாரு என்று உச்சுக்கொட்டி கொண்டிருக்கின்றனர். 

Leave a Comment