அனல் பறக்கும் தவெக குறித்த கருத்துக்கள்!! தனக்கென புதிய டிவி சேனல் உருவாக்கும் தவெக தலைவர் விஜய்!!

Photo of author

By Gayathri

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள பனையூரில் இக்கட்சியின் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. சீமான் உள்ளிட்ட தலைவர்களை இகழ்ந்து பேசக்கூடாது என்று தன்னுடைய தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்கள் மீது வரும் கண்டனங்களுக்கு உரிய ஆதாரங்களுடனும் கண்ணியத்துடனும் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் இக்கழகத்தின் மூலம் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் ஆகியவற்றை மக்களுக்கு நேரடியாக தெரிவிக்கும் வண்ணம் தமிழக வெற்றிக்கழகம் தனக்கென ஒரு தனி சேனலை உருவாக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் இந்த தொலைக்காட்சி சேனலுக்கு தமிழ் ஒளி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இக்கழகத்தின் செயலாளர் மூலம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அரசியலில் பலரும் தனக்கென தனி சேனல்களை உருவாக்கி இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விஜய் அவர்களும் தங்களுடைய கட்சிக்கு என தனி சேனலை உருவாக்கியுள்ளது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இக்கட்சி வட்டாரத்தினர் கூறும் பொழுது இதற்கு தமிழ் ஒளி என்ற பெயரே இருக்குமா என்பது சரியாக தெரியவில்லை. இதனை முழுமையாக தெரிந்து கொள்ள பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.