நாடக காதல் கட்ட பஞ்சாயத்திற்கு துணை போகும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தடை செய்ய கோரிக்கை: தேசிய அளவில் ட்ரெண்டாகும் #BAN_PCR_ACT
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கண்டு அச்சமடைந்து வரும் சூழ்நிலையில் அதை விட கொடுமையான PCR என்ற வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தடை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களை தீண்ட தகாதவர்களாக பார்த்த காலங்களில் அவர்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட PCR என்றழைக்கப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிற்காலத்தில் அந்த சமுதாயத்தை சேர்ந்த சில கும்பல்களால் தவறாக பயன்படுத்தப்பட்டது என தொடர் குற்றசாட்டுகள் எழுந்த வண்ணமே இருந்தது.
இந்நிலையில் அம்பேத்கார் பிறந்த நாளான இன்று தேசிய அளவில் அவருடைய புகழ் பேசி கொண்டிருக்கும் நிலையில் இந்த வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பெரும்பாலான மக்களால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து #BAN_PCR_ACT என்ற ஹேஷ் டேக்கில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பதிவிட்ட கருத்துக்கள் தேசிய அளவில் டிரென்ட் ஆகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் என்பது இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை உடனடியாக இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.
இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அது 1976 ஆம் ஆண்டில் பி.சி.ஆர். சட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்துமாறு இயற்றபட்டிருந்தது. பழங்குடியின மக்களுக்கு இந்த சட்டமானது பொருந்தவில்லை. இவ்வாறு இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை பாராளுமன்றம் அமைத்தது. பாராளுமன்றம் அமைத்த அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் மிகவும் தாமதமாக 1995 ஆம் ஆண்டில் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.
இந்த சட்டமும் முறையாக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றசாட்டு பரவலாக எழுந்தது. இதனால் ஏற்கனவே உள்ள வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்களை செய்து புதிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த திருத்தத்துடன் கூடிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது. இந்த 2015 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான பெரும்பாலான வழக்குகளில் 15 முதல் 16 விழுக்காடு போலி வழக்குகள் என தெரியவந்தது.
இதனையடுத்து அப்பாவி பொது மக்களை இவ்வாறு மதம் அல்லது சாதியின் பெயரால் பாதிப்புக்குள்ளாக்குவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். சாதி ரீதியான கொடுமைகளை நீக்க கொண்டு வரப்பட்ட சட்டம் சாதியை நிலைநிறுத்தவும், தனிப்பட்ட முறையில் குற்றமே செய்யாத அப்பாவி மக்களை பழிவாங்க பயன்படக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்காக என்று கூறப்பட்டாலும் விரைவில் இந்த சட்டமானது அந்த மக்களால் தவறாக பயன்படுத்தபட ஆரம்பித்தது. அதாவது அரசியல் அல்லது தனிப்பட்ட முறையில் தனக்கு ஆகாத நபர்களின் மீது வேண்டுமென்றே இந்த வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் கொடுக்கபட்டு குற்றமே செய்யாத நபர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் வழக்கமும், இதை வைத்து கட்டபஞ்சாயத்து செய்து பணம் பறிக்கும் வழக்கமும் தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நடைபெற்று வந்தன. அவ்வப்போது இது குறித்து புகார்களும் பதிவு செய்யப்பட்டன.
குறிப்பாக தலித் மக்களுக்கு எதிராக எதாவது குற்றங்கள் நடைபெறும் சூழலில் அவர்களுக்கு ஆதரவாக பெரும்பாலான ஊடகங்களும்,முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் வரிசை கட்டி கொண்டு குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் அதே தலித் மக்களால் மற்ற சமுதாய மக்களுக்கு எதாவது பிரச்சனை ஏற்பட்டால் இந்த ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் அமைதியாகி விடுகின்றனர் என்ற குற்றசாட்டுகள் பரவலாக எழுந்து வந்தன. இந்நிலையில் இவர்களின் துரோகத்தை எல்லாம் தோலுரிக்கும் விதமாக பெரும்பாலான மக்கள் ஆதாரத்துடன் குற்றசாட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில உங்களின் பார்வைக்ககாக.
14 வயதாகும் சிறுவன் பள்ளி மாணவியை கற்பழித்து விட்டு இந்த பி.சி.ஆர் சட்டத்தை பயன்படுத்தி தப்பித்துள்ளான். இந்த அளவிற்கு முட்டாள் தனமாக உள்ள சட்டம் நமக்கு தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தன் வீட்டை தானே கொளுத்திக்கொண்டு அப்பாவி மீது போலி PCR வழக்கு பதிவு செய்த கொடுமை! என்று வன்கொடுமை தடுப்பு சட்டம் எவ்வாறெல்லாம் தவறாக பயன்படுத்தப்பட்டது என பத்திரிக்கை செய்தி ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.
95% வன்கொடுமை சட்டங்கள் போலியாகவே பதியப்படுவதாக ஆய்வுகளும் தரவுகளும் கூறுகின்றன. ஆக அடுத்தவனை பழிவாங்க பயன்படுத்தப்படும் சட்டமான வன்கொடுமை சட்டம் வாபஸ் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
கெட்ட வார்த்தை சொல்லி திட்டினாலும் கூட சாதாரண வழக்கு தான் பதியப்படும். ஆனால் சில சாதி பெயரை சொல்லி திட்டினால் ஜாமினில் வரமுடியாத Pcr-ல் வழக்கு பதியப்படுகிறது. கெட்ட வார்த்தைகளை விட மிகப்பெரிய கெட்ட வார்த்தையாக சில சாதிகளை அடையாளப்படுதும் சட்டம் கைவிடப்படவேண்டும் என ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டம் அவர்களின் சுயநலனுக்காக அப்பாவி மக்களை பழிவாங்கும் நோக்கத்தில் பயன்படுத்தபடுவதை ஆதாரத்துடன் குறிப்பிட்டு குற்றம் சாட்டி வருவதால் விரைவில் இதில் சட்ட திருத்தம் செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.