அன்று தங்கத்தாரகை இன்று சமுதாய ஆஸ்கர்! உதயநிதி சூர்யாவுக்கு உலகமகா பிராடு விருது! ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பாமக பிரமுகர்

Photo of author

By Anand

அன்று தங்கத்தாரகை இன்று சமுதாய ஆஸ்கர்! உதயநிதி சூர்யாவுக்கு உலகமகா பிராடு விருது! ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பாமக பிரமுகர்
சில தினங்களாக நடிகர் சூர்யா,ஜோதிகா மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு சமுதாய ஆஸ்கர் விருது வழங்க போவதாக செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்நிலையில் அது ஒரு டுபாக்கூர் விருது என்பதை ஆதாரத்துடன் பாமக தரப்பு அம்பலபடுத்தியுள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் ஊடகபேரவை நிர்வாகியான அருள் ரத்தினம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது.
உதயநிதி ஸ்டாலின், சூர்யா, ஜோதிகாவுக்கு ‘உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது’ அளிக்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
பாஜகவின் என்ஆர்ஐ பிரதிநிதி விஜய் பிரபாகர் என்பவர் தான் இந்த ‘டுபாக்கூர்’ விருதினை உதயநிதிக்கு அளிப்பவர் என்பதும், இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கே ‘தங்கத்தாரகை’ எனும் ‘டுபாக்கூர்’ விருதை வழங்கியவர் என்பதும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்!
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசைக்காக NRI-BJP சார்பாக பிரச்சாரமும் செய்துள்ளார் விஜய் பிரபாகர். புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கும், முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துக்கும் ஏற்கனவே ‘சமுதாய ஆஸ்கர்’ விருதினை இவர் அளித்துள்ளார்.
பின்னணி என்ன?
தமிழ்நாட்டின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எட்வர்ட் ECP பிரபாகர் என்பவரின் மகனான, மருத்துவர் விஜய் பிரபாகர் என்பவர், அமெரிக்காவில் Multi Ethnic Advisory Task Force எனும் ஒரு அமைப்பை நடத்துகிறார். இந்த அமைப்பின் சார்பில் தான் ‘உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது’ (குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார் விருது) என்பதை உதயநிதி ஸ்டாலின், சூர்யா, ஜோதிகாவுக்கு வழங்குகிறார்கள். இதற்கும் அதிகாரப்பூர்வமான ‘ஆஸ்கர்’ அமைப்புக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
இதே விஜய் பிரபாகர், பாரதீய ஜனதா கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் (NRI-BJP) பிரிவின் தமிழக பிரதிநிதியாக அமெரிக்காவில் இருக்கிறார். இதனடிப்படையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாட்டுக்கு வந்து, பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனுக்காக தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரமும் செய்தார்.
தற்போது தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நெருக்கமானவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார். அவரை பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா: ‘தங்கத்தாரகை’ விருது
2004 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை எனும் டுபாக்கூர் விருதை அளித்து ஏமாற்றினார்கள். அப்பொது, ஐநா சபையே விருது வழங்குவதாகக் கூறி, அதிமுக அமைச்சர்கள் நாளிதழிகளில் 100 பக்கங்களில் முழுபக்க விளம்பரம் கொடுத்தார்கள். அந்த விருதுக்கு ஏற்பாடு செய்தவரும் இதே விஜய் பிரபாகர் தான். இந்த விருது வழங்கும் விழாவில் அவர் ஜெயலலிதாவுக்கு அருகே நின்றார் (படம்).
உக்ரைன் நாட்டின் சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு தங்கத்தாரகை விருது வழங்குவதாகவும், அது ஐ.நா சபையின் அதிகாரப்பூர்வமான ஆலோசனை அமைப்பு என்றும் பீலா விட்டார்கள் (Golden Star of Honour and Dignity Award by the International Human Rights Defense Committee, Ukraine). அதை ஐநா விருதென்று ஜெயலலிதா ஏமாளித்தனமாக நம்பினார். ஆனால், அது டுபாக்கூர் அமைப்பாகும். ஐநாவின் ஆலோசனை அமைப்புகளின் பட்டியலில் அப்படி ஒரு அமைப்பே இல்லை. (தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்புக் கூட ஐநா பட்டியலில் இருக்கிறது. ஆனால், தங்கத்தாரகை விருது வழங்கிய அமைப்பு இல்லவே இல்லை).
டுபாக்கூர் விருதுகள்: காலம் தோரும் தொடரும் கதை!
ஜெயலலிதாவுக்கு ஒரு ‘உக்ரைன் நாட்டு’ தங்கத்தாரகை, கலைஞருக்கு ஒரு ‘ஆஸ்திரியா நாட்டு’ ஸ்டாம்ப், விஜயகாந்துக்கு ஒரு ‘புளோரிடா மாகாண’ கிறிஸ்தவ மதபோதக டாக்டர் பட்டம், ஸ்டாலினுக்கு ஒரு ‘கென்டகி மாகாண’ கென்டகி கர்னல் விருது – என பல டுபாக்கூர் விருதுகள் வரிசையில் இப்போது உதயநிதி, சூர்யா, ஜோதிகா ஆகியோர் ”உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது” எனும் போலி விருதைப் பெருகிறார்கள்.
2004-ல் ஜெயலலிதாவுக்கு போலி விருது வழங்கியவர், 2019-ல் பாஜக பிரச்சாரகராக இருந்தவர், இப்போது உதயநிதி ஸ்டாலின், சூர்யா, ஜோதிகாவுக்கு விருது வழங்குவதும், அதனை உண்மை ‘ஆஸ்கர்’ போன்று ஊடகங்கள் கொண்டாடுவதும் வெட்கக் கேடு!
குறிப்புகள்:
1. விஜய் பிரபாகரை ‘விஜிபி’ என்று அழைக்கின்றனர். ஆனால், அது தமிழ்நாட்டின் ‘விஜிபி குழுமத்தை’ குறிக்கும் வார்த்தை அல்ல. இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எட்வர்ட் ECP பிரபாகர் என்பவருடைய மகன்.
2. அமெரிக்காவில் உள்ள எந்தவொரு சங்கமும், யாருக்கு வேண்டுமானாலும் விருது கொடுப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், ஐநா விருது என்று பொய்சொல்லி ஜெயலலிதாவை ஏமாற்றிவிட்டு, தேர்தலில் பாஜகவுக்கு பணியாற்றிவிட்டு, தற்போது ‘ஆஸ்கர்’ என்கிற பெயரில் உதயநிதி ஸ்டாலினுக்கும் சூர்யாவுக்கும் விருது கொடுப்பதும், அதனை ஊடகங்கள் ‘உண்மையான ஆஸ்கர் விருது’ போன்று பிரச்சாரம் செய்வதுமே அநீதியானது. தமிழக மக்களை அப்பட்டமாக ஏமாற்றும் செயல் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆதாரங்கள்:
1. உதயநிதி ஸ்டாலின், சூர்யா, ஜோதிகாவுக்கு ‘உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது’ வழங்கும் விஜய் பிரபாகர், 2004-இ ஜெயலலிதாவுக்கு போலி தங்கத்தாரகை விருது வழங்குகிறார்.
2. உதயநிதி ஸ்டாலின், சூர்யா, ஜோதிகாவுக்கு ‘உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது’ வழங்கும் விஜய் பிரபாகர், 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாட்டுக்கு வந்து, பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனுக்காக தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரமும் செய்தார்.
May be an image of 5 people, people standing and outdoors
3. உதயநிதி ஸ்டாலின், சூர்யா, ஜோதிகாவுக்கு ‘உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது’ வழங்கும் விஜய் பிரபாகர், அமித் ஷாவுடன்
May be an image of 4 people, people standing and text that says "GLOBAL P"
4. உதயநிதி ஸ்டாலின், சூர்யா, ஜோதிகாவுக்கு ‘உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது’ வழங்கும் விஜய் பிரபாகர், திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுடன்.
May be an image of 2 people and people standing
5. உதயநிதி ஸ்டாலின், சூர்யா, ஜோதிகாவுக்கு ‘உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது’ வழங்கப்படும் அதே விருது அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு வழங்கப்பட்ட போது