இனி ஆபாச நடனம் ஆடினால் புகார்!  உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி!

Photo of author

By Amutha

இனி ஆபாச நடனம் ஆடினால் புகார்!  உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி!

Amutha

Updated on:

இனி ஆபாச நடனம் ஆடினால் புகார்!  உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி!

தமிழகத்தில் திருவிழா சமயங்களில் குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடினால் புகார் அளிக்கலாம் என ஐகோர்ட் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதி வழங்கக் கூடாது. இதனை மீறி ஆபாசமாக ஆடினால் புகார் அளிக்க வென தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு இடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாசமாக நடனம் ஆடுவதாக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. அதில் இணையதளங்களில் குறவன் குறத்தி நாடகங்களை பார்ப்பதற்கு தேடினால் அதில் பெரும்பாலானவை மிகவும் ஆபாசமான நடனங்களாகவே உள்ளன. இவற்றை வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தமிழ்நாட்டில் குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாசமான நடனங்கள் நடைபெறக்கூடாது. இதற்கென தனிப்பிரிவு ஒன்று அமைத்து குறவன் குறத்தி பெயரில் ஆபாச நடனம் ஆடினால்  புகார் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். குறவன் குறத்தி மக்களை இழிவுபடுத்தும் வண்ணம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது  கடின நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.