100 வேலை திட்டம் பற்றி புகார் – விசாரணையில் அதிகாரிகள்
தென்காசி மாவட்டம் தாருகபுரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், 100 வேலை திட்டத்தில் தவறு நடப்பதாகவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர், தமிழக ஊரக வளர்ச்சித்துறைக்கு பதில் மனுவை அனுப்பியுள்ளார்.
மணிகண்டன் அளித்த புகார் தவறு, சில அரசியல் சூட்சியாளர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு இப்படி செய்கிறார்.
கூலியாளர்கள் காலை வேலைக்கு வந்தவுடனும், மாலை வீடு திரும்பும் போதும் வருகை பதிவு செய்துவிடுவோம். அவர்களின் சம்பளத்தை அவர்களது வங்கி கணக்கில் போட்டுவிடுவோம்.
மேலும் வேலைக்கு வரும் அனைத்து பணியாளர்களின் ஆதார் அட்டையை, எங்களது செயலில் இணைத்துவிட்டோம்.
மணிகண்டன் அளித்த தவறான புகாரை, உயர் அதிகாரிகள் மேற்பார்வையிட வேண்டும். காரணம் ஊராட்சி செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பணியின் நிலையை கண்காணித்து கொண்டே இருப்பார்கள்.
இதுவரை எந்த ஒரு தனியார் நிலத்திலும் வேலை நடைப்பெறவில்லை, வேலையை ஜி.பி.எஸ் தொழில் நுட்பம் மூலம் கண்காணித்து, 93 லட்சம் பயனாளிகளுக்கு உபயோகிப்பது என்பது சாத்தியமில்லை.
மத்திய ஊரக வளர்ச்சி துறையின் வழிகாட்டுதலின் படி என்.எம்.எம்.எஸ் செயலியின் பயன்பாட்டை மாவட்ட ஆட்சியர்கள் பயன்படுத்த வேண்டும். அதை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என அவர் அளித்த பதில் மனுவில் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி கூறியது: மணிகண்டன் அளித்த புகாரை 12 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏதேனும் தவறு நடந்திருந்தால். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.