ஜெயம் ரவி அளித்த புகார்! ஆர்த்தியிடம் விசாரணை நடத்திய காவல் துறை! குழப்பத்தில் தவிக்கும் குடும்பங்கள்! 

Photo of author

By Rupa

 

நடிகர் ஜெயம் ரவி அவர்கள் மனைவி ஆர்த்தி மீது புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் நடிகர் ஜெயம் ரவி அவர்களின் மனைவியிடம் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தார். நடிகர் ஜெயம் ரவி அவர்களுடைய இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து அடுத்து இரண்டு தினங்களுக்குள் நடிகர் ஜெயம் ரவி அவர்களின் மனைவி ஆர்த்தி அவர்கள் ஜெயம் ரவி அவர்கள் விவாகரத்து தொடர்பாக என்னிடம் எதுவும் கேட்காமல் அறிவித்துவிட்டார். இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருந்தார்.

அனைவரும் ஜெயம் ரவி விவாகரத்து தொடர்பாக பேசி வந்தனர். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகர் ஜெயம் ரவி அவர்கள் நானும் கெனிஷா அவர்களும் நல்ல நண்பர்கள் மட்டுமே. கெனிஷா அவர்கள் நல்ல ஹீலிங் மருத்துவர்.

நானும் அவரும் இணைந்து ஒரு ஹீலிங் சென்டர் ஒன்றை தொடங்குவதாக திட்டமிட்டு இருக்கின்றோம். அவரை பற்றியும் என்னை பற்றியும் தவறாக பேச வேண்டாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று(செப்டம்பர்24) நடிகர் ஜெயம் ரவி அவர்கள் தன்னுடைய மனைவி ஆர்த்தி மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

நடிகர் ஜெயம் ரவி அவர்கள் அளித்துள்ள அந்த புகாரில் ஆர்த்தி அவர்கள் பனையூர் இல்லத்தில் இருந்து என்னை வெளியேற்றி விட்டார். ஆர்த்தி அவர்களின் வீட்டில் இருக்கும் என்னுடைய உடமைகளை கைப்பற்றி தர வேண்டும். மேலும் எனக்கு சொந்தமான காரை கூட எடுக்க முடியவில்லை. எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து நடிகர் ஜெயம் ரவி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறையும் ஆர்த்தியிடம் சென்று விசாரணை நடத்தியுள்ளது. அப்பொழுது ஆர்த்தி அவர்கள் காவல்துறையிடம் “ஏன் சார் நீங்க எங்க வீட்டுக்கு வரும் பொழுது நாங்கள் வீட்டை பூட்டி வைத்திருந்தோமா? என்னுடைய வீட்டின் வாசலில் கூட ஆர்த்தி ரவி என்று தான் இருக்கின்றது.

நான் ஏன் அவரை வீட்டை விட்டு வெளியேற்றப் போகின்றேன். இது அவருடைய வீடு ஆகும். அவர் எப்பொழுது வேண்டுமானாலும் இங்கு தாராளமாக வரலாம் போகலாம்” என்று கூறியுள்ளார். இதையடுத்து யார் சொல்வது தான் உண்மை என்ற குழப்பத்தில் காவல் துறையினர் இருக்கின்றனர்.

காவல் துறையினர் மட்டுமில்லாமல் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி அவர்களுடைய குடும்பத்தாரும் குழப்பத்தில் தான் இருக்கின்றனர். அதாவது நடிகர் ஜெயம் ரவி அவர்கள் விவாகரத்து வாங்கியே ஆக வேண்டும் என்றும் ஆர்த்தி அவர்கள் விவாகரத்து தர மாட்டேன் என்றும் இருக்கின்றனர். இதனால் குடும்பத்தாரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

.