காவல்நிலையத்தில் பலதரப்பட்ட புகார்கள் வரும். குற்றம், குடும்ப பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு புகார்கள் வரும்நிலையில், சுவாரசியமான புகார் ஒன்று வந்துள்ளது. காலையில் சேவல் கூவுவது இயல்பு தானே என நமக்கு ஆச்சரியம் ஏற்படலாம் ஆனால், அதிகாலையில் சேவல் கூவியது தனக்கு எரிச்சலாக இருப்பதால் புகார் அளித்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பலாசியா பகுதியில் வசித்துவருபவர் அலோக்மோடி. மருத்துவரான இவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எனது சகோதரர் வீட்டின் அருகில் உள்ள பெண் சேவல்களை வளர்த்து வருகிறார்.அவை தினமும் காலையில் தவறாமல் கூவுகிறது. நான் வேலை முடிந்து இரவு தாமதமாக வருவேன் ஓய்வெடுக்கலாம் என்ற போதெல்லாம் அவை அதிகாலை 5 மணிக்கே கூவி தூக்கத்தை கலைத்து விடுகின்றன.
இது முற்றிலும் என்னை எரிச்சல் தருவதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த புகாரை காவல்நிலைய பொறுப்பாளர் உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் தெரிவிக்கும் போது இந்த புகார் குறித்து இருதரப்புக்கும் இடையில் சுமூக பேச்சுவார்த்தை நடத்தபோவதாகவும் அதில், முடிவு எட்டபடாவிடில் குற்றவியல் நடைமுறையை பின்பற்றுவோம் என தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது சட்டபிரிவு 133ன் படி குற்றம் எனவும் அதனை மேற்கொள்ளுவோம் என தெரிவித்துள்ளனர். இந்த புகார் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.