கஞ்சா மற்றும் போதை பொருட்கள் குறித்த புகாரா? தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட புதிய தகவல்!!
கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை ஒழிக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம், எனவே பள்ளி, கல்லூரி வளாகங்களிலோ அதற்கு அருகாமையிலோ கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை இருந்தால் அதுபற்றி பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,பள்ளி, கல்லூாரி நிர்வாகத்தினர், ஊழியர்கள், பொதுமக்கள் தயக்கமின்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
புகார் எண் -9344014104, தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விபரங்கள் இரகசியமாக பாதுகாக்கபடும்.அடுத்த தலைமுறையினர் போதைக்கு அடிமையாகாமல் இருக்க
நம்முடைய ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக மிக அவசியம் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.