வரலாற்று சிறப்புமிக்க ஐந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்-ஜிவி பிரகாஷ் பேட்டி!

0
263
#image_title

வரலாற்று சிறப்புமிக்க ஐந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன் – இந்தியாவின் மிகப்பெரிய டைரக்டரின் படத்தில் நடித்து வருகிறேன் ஜிவி பிரகாஷ்  பேட்டி.

தனியாக இசை நிகழ்ச்சி நடத்துவது சம்பந்தமாக எனக்கு எந்த எண்ணமும் இல்லை படத்தில் நடிப்பதிலும் இசையமைப்பதிலும் பிசியாக இருந்து வந்தேன். கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் பலரும் நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தனர். இதற்கு மக்களின் கூட்டமும் ஆதரவும் அதிகரித்தது, எனவே மக்கள் சந்திக்கும் போது தான் இது போன்ற எண்ணங்களும் வரும்.

அதனால் தான் இந்த நிகழ்ச்சி வரும் 27ஆம் தேதி தமிழகத்தில் முதல்முறையாக நடத்த உள்ளேன். அதனால் இந்த நிகழ்ச்சியை கோவையில் நடத்தலாம் என்ற எண்ணம் வந்தது கொடிசியாவில் இந்த இசை நிகழ்ச்சியை நான் நடத்த உள்ளேன்.

என்னுடைய இசையில் மிகவும் பிரபலமானது ஆயிரத்தில் ஒருவன் படம் தமிழகத்தில் ஒரு முக்கியமான படமாகவும் நினைக்கக்கூடிய படமாகவும் உள்ளது. அதன் ஞாபகமாக இருக்கட்டும் அதை கொண்டாடும் வகையில் தான் என்னுடைய இசை நிகழ்ச்சிக்கு ஆயிரத்தில் ஒருவன் என பெயர் வைத்துள்ளேன்.

இந்த பெயர் வைப்பதற்கு பேச்சுலர் பட இயக்குனர் மற்றும் அலாவுதீன் என்பவர்கள் தான் கொடுத்தார்கள். மேலும் நான் வரலாற்று சிறப்புமிக்க படங்களுக்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன். ஆயிரத்தில் ஒருவன் மதராசபட்டினம் படங்களுக்குப் பிறகு தற்போது டைகர் நாகேஸ்வரராவ் கேப்டன் மில்லர் தங்களான் எமர்ஜென்சி போன்ற ஐந்து வரலாற்று சிறப்புமிக்க படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்.

நடிப்பும் இசை இரண்டையும் சரியாக கையாள வேண்டும் அதற்கான கால அவகாசத்தை சரியாக கனித்து சரியாக செயல்பட வேண்டும். நான் அடுத்தபடியாக ஒரு பெரிய டைரக்டர் படம் பண்ணப் போகின்றேன். அது என்ன என்பது குறித்து அவர்தான் வெளியிட வேண்டும். அவர் இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய டைரக்டர் மற்றும் இன்டர்நேஷனல் அளவிற்கு சிறந்தவர். அவர்தான் அது என்ன படம் எந்த மாதிரியான கதை என்பதை வெளியிட வேண்டும்.

இசையில் வித்தியாசமாக முயற்சி செய்கிறார்கள் குறிப்பாக டான்ஸ் ரசிகர்களுக்கு காதல் பாடல்கள் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும். எந்த இசையாக இருந்தாலும் சரி சுவாரசியமாகவும் உடனடியாக பிடித்து விடுவது போலவும் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை தற்போது முதல் முறையாக கோவையில் நடத்த உள்ளேன். அதன் பிறகு மலேசியா உள்பட பல இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கோவையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை நானும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் எப்படி இருக்க போகின்றது. எப்படி ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்துள்ளேன் என்றார்.

Previous articleபுதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !!
Next articleசிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர்! பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!