கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் குவிப்பு – தலைமைத் தளபதி தகவல்!

0
142

லடாக் எல்லையில் தொடர்ந்து நீடித்து வரும் பரபரப்பான சூழல். தற்போது கிழக்கு லடாக் பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் கடுங்குளிரும், உறைய வைக்கும் அளவிற்கு பனியும் சூழ்ந்துள்ளது. ராணுவ வீரர்களை எந்த நேரமும் எச்சரிக்கையாக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.

அதுமட்டுமன்றி முப்படைகளையும் போர்க்கால அடிப்படையில் அனைத்திற்கும் தயாராக இருக்கும்படி தலைமைத் தளபதி பிபின் ராவத் அறிவுறுத்தி உள்ளார். மேலும் எல்லைப் பகுதிகளில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஊத்வேகம் அளிக்கும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையிலும் தேவையான செயல்பாடுகளை செய்து வருகின்றனர்.

அத்துடன் அந்த வீரர்களை பொழுதுபோக்கு மற்றும் இதர வேலைகளில் இருந்து விடுபட்டு முழு நேரமும் எச்சரிக்கையாகவும், கவனத்துடனும் செயல்படும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் 1,597 கிலோமீட்டர் நீளம் கொண்ட கட்டுப்பாட்டு எல்லை மீது டாங்குகள், பீரங்கிகளுடன் படைகளையும் குவிக்கப்பட்டுள்ள இந்த காலகட்டம் இயல்பானது அல்ல என்பதாலும், எந்த நேரத்திலும் லடாக் பகுதிகளில் மோசமான நிலைமை ஏற்படலாம் என்பதாலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மார்க்கோஸ் எனும் போர்ப் படைகளையும் லடாக் எல்லைப்பகுதியில் நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மார்கோஸ் என்பது மரைன் கமாண்டோ என்ற சிறப்பு கடற்படையை சேர்ந்தது. மேலும் லடாக் பகுதியில் என்ன நடந்தாலும் அவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.

அதுமட்டுமின்றி லடாக் பகுதிகளில் இருக்கின்ற ராணுவ வீரர்களுக்கும், மார்க்கோஸ் படையைச் சேர்ந்த வீரர்களுக்கும் கடும் குளிரைத் தாங்கிக் கொள்ளக்கூடிய ஆடைகளும், முக கவசங்களும் அமெரிக்காவிலிருந்து நவம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleவெளியானது மோஷன் பிக்சர்…! கதறும் சமூக விரோத கும்பல்…!
Next articleஅமெரிக்கா அமைச்சர்கள் இன்று இந்தியா வருகை – எதற்கு தெரியுமா?