பெருமாளின் ஆசியோடு செல்வ வளத்தை தரும் சங்கு சக்கர விளக்கு…!!
புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும், திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர்.புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி மாதமாகும்.புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாள் விரதத்திற்கு உகந்தவை.புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து வருடம் முழுவதும் நமது துன்பங்களை நீக்கி இன்பம் தருவார். அதிலும், ஏழரை சனியால் பிடிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லை நிச்சயம் நீங்கும்.சங்கு சக்கர விளக்கு :பெருமாள் என்றாலே நம் நினைவிற்கு வருவது சங்கும் மற்றும் சக்கரமும் தான். மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு வகையான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பார்.
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில், சிறப்பை தரும் சங்கு சக்கர நாம வடிவில் இருக்கும் விளக்கை ஏற்றி வழிபடும்போது வீட்டில் செல்வங்கள் நிறைந்து பிரகாசமாக இருக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. மேலும் பெருமாளையும், மகாலட்சுமி தாயாரையும் மனதார நினைத்து சங்கு சக்கர நாம விளக்கு ஏற்றுவதன் மூலம் திருப்பதி ஏழுமலையான் வீட்டில் குடிகொண்டிருப்பதாக முன்னோர்களால் நம்பப்படுகிறது. சங்கு சக்கர விளக்கை ஏற்றுவதால் இன்னல்கள் யாவும் பறந்தோடும். இல்லத்தில் நிம்மதியும்,ஆனந்தமும் குடிகொள்ளும்.வீட்டில் தடைபடும் சுபகாரியங்கள் அனைத்தும் இனிதே நடைபெறும்.பொருளாதார கஷ்டங்களை விலக செய்யும். தொழிலில் ஏற்படும் தடைகளை தகர்த்து லாபத்தை மேம்படுத்தும். மேலும் குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும்.எதிர்மறை எண்ணங்களை நீக்கவல்லது.