வாழ்த்து மழையில் நனையும் பிரபலம்!

0
233

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பிரசன்னா தனது 38வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்துடன் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்.

நடிகர் பிரசன்னா 2002 ஆம் ஆண்டு மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான “5 ஸ்டார்” படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

பிரசன்னாவின் தந்தை திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்ததால் சிறுவயதில் இருந்து அவரது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை திருச்சியிலேயே பயின்றார்.

அதன்பின் சினிமாவில் கால் பதித்த பிரசன்னா மே மாதம் 11ஆம் தேதி 2012ஆம் ஆண்டு சிரிப்பழகி என ரசிகர்களால்  செல்லமாக அழைக்கப்படும் சினேகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.வாழ்த்து மழையில் நனையும் பிரபலம்!தற்போது இருவரும் சினிமாவில் அவ்வப்போது படங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் தங்கள் குடும்பத்தோடு இன்று பிரசன்னா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

 

Previous articleஇன்று முதல் மூடப்படுகின்றது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
Next articleதஞ்சையில் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here