Candycrush க்கு அதிஷ்டம்  3 மணி நேரத்துல 30 லட்சம் டவுன்லோட் !! கேப்டன் கூல் பண்ணிய வேலையால் நிறுவனம் மகிழ்ச்சி!!

0
124
Congratulations to Candycrush 30 lakh downloads in 3 hours !! The company is happy with the work done by Captain Cool!!
Congratulations to Candycrush 30 lakh downloads in 3 hours !! The company is happy with the work done by Captain Cool!!

Candycrush க்கு அதிஷ்டம்  3 மணி நேரத்துல 30 லட்சம் டவுன்லோட் !! கேப்டன் கூல் பண்ணிய வேலையால் நிறுவனம் மகிழ்ச்சி!!

எம்.எஸ்.தோனி முன்னாள் இந்தியா கிரிக்கெட் அணி கேப்டன். இவர் பற்றி தெரியாதவர்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் எங்குமில்லை. இவர் உலக அளவில் புகழ் பெற்ற இந்தியா கிரிக்கெட் வீரர்.

தோனி கேப்டனாகவும் ,சிறந்த வீரராகவும் இந்தியாவிற்கு பல கோப்பைகளை வென்று தந்தவர். இது மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் தமிழ்நாட்டிற்காக 5 முறை கோப்பையை வாங்கி தந்துள்ளார். இது போன்று அவர் பல சாதனைகளை செய்து வருகிறார்.

பொதுவாக தோனி தனது மொபைலை  குறைவாக பயன்படுத்துவர்.

இவர் சமீபத்தில் விமானத்தில் பயணிக்கும் போது விமான பணிப்பெண் ஒருவர் தோனிக்கு அன்பு பரிசாக சில சாக்லேட்டை கொடுத்துள்ளார். மேலும் சாக்லேட் கொடுத்த வீடியோவை அந்த பணிப்பெண் எடுத்துள்ளார். அந்த வீடியோவில் சாக்லேட் மற்றும் தோனி பயன்படுத்திய டேப்பில் கேண்டி க்ரஷ் ஆன்லைன் விளையாட்டு இருந்ததுள்ளது.

இந்த வீடியோ சமூக வளைத்ததில் பரவிவருகிறது. இந்த சூழ்நிலையில் தோனி ரசிகர் ஒருவர்  candy crush saga official  என்ற ஒரு இணையதள போலி கணக்கை உருவாக்கியுள்ளார். மேலும் அந்த வீடியோவை பார்த்து தோனி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களும் கேண்டி க்ரஷ் அதிகம் டவுன்லோட் செய்துள்ளர்கள்.

இந்நிலையில் 3 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் இதனை டவுன்லோட் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு அந்த நிறுவனம் தோனிக்கு நன்றி தெரிவித்துள்ளது. இப்போது நாங்கள் ட்ரெண்டிங்கில் இருபதற்கு காரணம் நீங்கள் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

author avatar
Jeevitha