வெளியானது மாநாடு பட டீஸர்! வைரலாக்கும் ரசிகர்கள்!

Photo of author

By Sakthi

நடிகர் சிம்புவின் பிறந்த நாளை ஒட்டி அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் மாநாடு திரைப்படத்தின் டீசரை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ,ஜே சூர்யா எஸ். ஏ சந்திரசேகர் போன்றோர் நடித்து இருக்கின்ற திரைப்படம் மாநாடு யுவன்சங்கர்ராஜா இசையமைத்து இருக்கின்ற இந்த திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் சிம்பு அப்துல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இருக்கிற நிலையில், தற்சமயம் படப்பிடிப்பிற்கான post-production பணிகள் வேகமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்தத் திரைப்படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு ,மலையாளம், போன்ற மற்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது. அதற்காக எல்லா மொழியிலும் இந்த திரைப் படம் திரைத்துறைக்கு ஏற்றார்போல முக்கிய பிரபலம் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழில் இந்த டீசரை ஏ ஆர் ரகுமான் தெரிவித்திருக்கிறார். அதேபோல தெலுங்கு டீசரை ரவி தேஜா அவர்களும் மலையாள டீசரை பிரித்திவிராஜ் அவர்களும், கன்னட டீசரை நடிகர் சுதீப் அவர்களும், இந்தி டீசரை இயக்குனர் அனுராக் கஷ்யப்பும், வெளியிட்டிருக்கிறார்கள்.

எப்போதுமே நடிகர் சிம்பு நடிக்கும் திரைப்படங்களில் வசனங்கள் அதிரடி சண்டைக்காட்சிகள் என்ற அனைத்தும் நிறைவாக இருக்கும். ஆனாலும் மாநாடு திரைப்பட டீசர் அதற்கு எதிர்மறையானதாக இருக்கிறது. பரபரப்பான காட்சிகள் மற்றும் எந்தவிதமான மிகப்பெரிய வசனமும் இல்லாமல் வெளியாகியிருக்கிறது. சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரும் அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்கள் எல்லாவற்றிலும் மாநாடு டீஸரை வைரலாக்கி வருகிறார்கள்.