சசிகலா மற்றும் தினகரன் இடையே ஏற்பட்ட விரிசல்! காரணம் யார் தெரியுமா!

0
77

சசிகலா டிடிவி தினகரனிடன் தன்னுடைய பணிகளை ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார். அதன் காரணமாக அவர் ஒப்படைத்த பணிகள் அனைத்தும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, தற்போது நடந்து வரும் ஆட்சியில் தமிழகத்து உடைய உரிமைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் ஏவலாளியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இயங்கி வருகிறார். அதற்காக அவர் சிறிது கூட வருத்தப்பட்டது போல தெரியவில்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தில் அவர் பிறந்த மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி உரையாற்ற அழைக்கப்பட்ட நேரத்தில், காவி கும்பல் எழுப்பும் ஒலியில் நான் உரையாற்றுவதற்கு விருப்பம் இல்லை என்று பிரதமர் உரையாடிக் கொண்டிருந்த மேடை நிராகரித்து சென்றார். ஆனால் அவர் ஒரு பெண்மணி ஆனால் இவர்களோ வேட்டி கட்டி இருக்கும் ஆண்மகன் என்ற நிலையிலும் கூட தமிழ்நாட்டை இன்றைய தினம் இழிவு படுத்தி விட்டார்கள் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் தராத காரணத்தால் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே கொண்டு வரப்படும் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இரட்டை குழல் துப்பாக்கிகள் என்று திராவிட கழகத்தின் வரலாற்றின் தந்தை பெரியார் அறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகம் போன்றவற்றை தெரிவித்தார்கள். இவர்களைப் போல ஒரு சிலர் இரட்டை குழல் துப்பாக்கி என்று சொல்வதால் இவர்கள் துப்பாக்கியை கேவலப்படுத்தி விட்டார்கள். ஒருவர் காட்டிக் கொடுக்கிறார், இன்னொருவர் காலில் விழுகிறார் என்று தெரிவித்திருக்கிறார் நாஞ்சில் சம்பத்.

பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன தினத்திலிருந்து சசிகலா பயணம் செய்கிற காரில் அதிமுகவின் கொடி பறக்கவிடப்பட்ட திலிருந்து அவர் ஒரு போருக்கு தயாராகி இருக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது .சசிகலா அதிமுகவை வழிநடத்துவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் சசிகலாவின் தமிழக வருகைக்குப் பின்னர் ஆளும் கட்சியான அதிமுகவில் ஒரு மிகப்பெரிய யூகிக்க முடியாத மாற்றம் ஏற்படப் போகிறது. அந்த மாற்றத்தின் பொழுது தமிழகத்தின் துணை முதல்வர் உள்ளிட்டோர் கட்சியில் நிராகரிக்க படுவார்கள். அவர்கள் அரசியல் சரித்திரம் ஒரு முடிவை நோக்கிச் சென்று விடும் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. டிடிவி தினகரன் இடம் ஒரு தலைமை பண்பு என்பது இல்லை தினகரன் அலைகடலென வந்தவர்களை அரவணைத்துச் செல்வதற்கு முயற்சி செய்யவில்லை. அவர் தலைமையில் இருந்துவரும் அமைப்பு இன்றைய தினம் ஒரு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து இருப்பதற்கு காரணம் அவருடைய நடவடிக்கைகள்தான் என்று தெரிவித்திருக்கிறார். சசிகலா தினகரன் அவர்களை முழுமையாக நம்பி தன்னுடைய பணிகளை கொடுத்துவிட்டு சென்றிருந்தார். ஆனால் அவர் கொடுத்து விட்டுச் சென்ற பணிகளை யாவும் வீழ்ச்சியை நோக்கி தான் சென்று இருக்கிறது என்று தெரிவித்தார் நாஞ்சில் சம்பத்.