ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிகளுக்கும் ஆளுநர் தான் பொறுப்பு – காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை!! 

0
250
#image_title

ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிகளுக்கும் ஆளுநர் தான் பொறுப்பு – காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை!!

தமிழ்நாடு ஆளுநர் அவர்களே, உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு உயிர் கொலையில் பறிபோயுள்ளது. இன்று (02.04.2023) தூத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் கிராமத்தில் லாரி டிரைவர் நல்லதம்பி பல லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியால் இழந்த நிலையில் தனது அண்ணனிடம் 3 லட்சம் கடன் வாங்கி அதையும் இழந்துள்ளார்.

இதனால், அண்ணன் அவரது தம்பி நல்லதம்பியை அடித்து கொன்றுள்ளார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

தமிழ்நாடு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாத ஆளுனருக்கு இன்னும் எத்துனை உயிர்கள் ஆன்லைன் ரம்மியால் பறிப்போனபின் கருணை உள்ளம் பிறக்கும்?

அரசியல் சட்டத்தையும், தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசையும், மாண்புமிக்க சட்டமன்றதையும் மதிக்காத ஆளுநர் தமிழ்நாட்டுக்கு தேவையா? உடனடியாக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், இல்லையென்றால் ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும்.

ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிகளுக்கும் ஆளுநர் அவர்கள்தான் முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும்.

Previous articleநீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை அபகரித்த பெண் வழக்கறிஞர் கைது!!
Next articleநாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபர் கைது!