Congess TVK: பீகாரின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து குறிப்பாக தமிழக கட்சி தலைகள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் வழக்கத்திற்கு மாறான தோல்வியை காங்கிரஸ் சந்தித்துள்ளது. இதன் தொடர்ச்சியை தமிழகத்தில் இருக்கக் கூடாது என எண்ணுகின்றனர். கடந்த சட்டப்பேரவை தேர்தல் வரை திமுக அதிமுக என்று மட்டுமே போட்டி இருந்தது. ஆனால் இந்த சட்டப் பேரவை தேர்தல் ஒவ்வொரு கட்சியினருக்கும் சவாலாக தான் இருக்கும்.
விஜய்யின் தவெக வால் பலரது வாக்கு வங்கி சரியக் கூடும். சரத்குமார் கமல் என பலரும் அரசியலுக்குள் நுழைந்து தனி பெரும்பான்மையாக செயல்பட முடியாமல் கூட்டணிக்குள் கைகோர்த்து விட்டனர். அந்த வரிசையில் காலம் காலமாக வாரிசு அரசியல் செய்துவரும் திமுகவே விஜய்யை தனது எதிரியாக பார்க்கும் தரத்தில் உள்ளார். மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி என்ன நடந்தாலும் விஜய்யை விமர்சிக்க கூடாது என முடிவெடுத்துள்ளார்.
இது ரீதியாக அவர் அரசியல் நகர்வுகளை கூர்மையாக கவனித்தும் வருகிறார். தமிழகத்தில் போட்டி நிலை இப்படி இருக்கும்போது சாதகமாக அமையும் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவை தற்போது காங்கிரஸ் எடுத்துள்ளதாம். வரும் நாட்களில் விஜய்யுடன் கூட்டணி வைத்தால் பெரும்பான்மையான தொகுதிகளாவது கிடைக்கும் என நம்புகின்றனர். ஆளும் கட்சியுடன் கூட்டணி இருந்தாலும் தேவையான இடங்களில் தங்களுக்கு மரியாதை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
குடும்ப அரசியலை மட்டும் தான் அவர்கள் இறுதிவரை வளர்ப்பார்கள் என்பதை உணர்ந்த ராகுல் காந்தி விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளாரம். தேர்தல் நேரம் நெருங்கும் சமயத்தில் இவர்கள் கூட்டணி உறுதியாகும் என்று அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

