எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தி யாரிடம் உள்ளது? பிரஷாந்த் கிஷோர் அதிரடி பதில்!

Photo of author

By Sakthi

சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உட்பட 5 மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது இந்த சூழ்நிலையில், தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் இருக்கக்கூடிய அந்த கட்சியின் தலைவர்கள் மீது காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தியிலிருந்ததாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைமை ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது அதன்படி இந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அந்த கட்சியின் தலைமை ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

அதன் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களை சார்ந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் அந்த கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி.

இந்த சூழ்நிலையில், ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, உட்பட பல்வேறு கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு பிரசார வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு வழங்கியிருக்கின்ற பேட்டியில் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

அதாவது காங்கிரஸ் மறு அவதாரம் எடுக்க வேண்டும் அந்தக் கட்சியின் அடிப்படையில் மாற்றம் செய்ய வேண்டிய நேரம் இது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு அந்த கட்சியின் ஆன்மா கருத்துக்கள் மற்றும் சித்தாந்தங்கள் ஆகிய அனைத்தும் புதிதாக ஏற்பட வேண்டும்.

சோனியா காந்தி குடும்பத்தினர் காங்கிரஸ் தலைமை பொறுப்பில் இருந்து வெளியேறினாலும் அந்த கட்சியை மீண்டும் துளிர்த்திட முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் பேசிய அவர் இன்று அந்த கட்சி தன்னுடைய செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்தினாலே போதும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதற்கு சவால் விட முடியும் கிழக்கு மற்றும் தென் இந்தியாவை உள்ளடக்கிய சுமார் 200 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக இன்னும் 50 இடங்களுக்கு மேல் பெற முடியாமல் திணறி வருகிறது. என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் சக்தி இன்று யாரிடமிருக்கிறது என்ற கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுத்த பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சி உண்மையில் தன்னுடைய மனதை ஒருங்கிணைந்து செயல்பட்டால் அந்த சக்தியாக உருவெடுக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலமாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவை காங்கிரஸ் கட்சியினால் எதிர்த்து போட்டியிட முடியாது என்று மறைமுகமாக அவர் தெரிவித்திருப்பதாகவே கருதமுடிகிறது.

ஆகவே பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் 20 வருடகாலம் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்ததைப் போல தற்போது இந்திய அளவிலும் அசைக்கமுடியாத சக்தியாக அடுத்து வரும் 10 வருடங்களுக்கும் அவர் மிகப்பெரிய தூணாக திகழ்வார் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.