இன்று முதல் இவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்! பொது சுகாதார துறை அதிரடி உத்தரவு!

0
78

நாட்டில் நோய் தொற்றுக்கு எதிராக மத்திய, மாநில, அரசுகள் தீவிரமாக போராடி வருகின்றன. அதன் பலனாக தற்சமயம் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைந்திருக்கிறது.

இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய ஆயுதமாக 2 வருவது தடுப்பூசிகள்தான். ஆகவே இந்த தடுப்பூசிகளை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய ,மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், நாட்டில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக், உள்ளிட்ட தடுப்பூசிகள் பொது மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் 2 தவணைகள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மேலும் தேவைப்படுவோர் கூடுதலாக போஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் உள்ளிட்ட மேலைநாடுகளில் முதலாக 2 தவணைகள் போஸ்டர் வரையில் செலுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 15 முதல் 18 வயது வரையில் இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் 12 முதல் 14 வயது வரையில் இருப்பவர்களுக்கு நோய் தொற்று தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 12 முதல் 14 வயது வரையிலுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கார்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.

இந்த வயதை ஒத்தவர்கள் தாங்களாகவோ அல்லது பெற்றோர் துணையுடனோ கோவின் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் ஆதார் அட்டை இல்லாதவர்கள் பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இன்று முதல் எதிர்வரும் 25ஆம் தேதிக்குள் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு நோய்தொற்று தடுப்பூசியை பள்ளிகளிலேயே சென்று செலுத்தி முடிக்க அனைத்து மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.