ஆட்டத்திலேயே இல்லாத காங்கிரஸ்:டெல்லி தேர்தல் நிலவரம்!ஆட்சி அமைக்க இருக்கும் ஆம் ஆத்மி!

Photo of author

By Parthipan K

ஆட்டத்திலேயே இல்லாத காங்கிரஸ்:டெல்லி தேர்தல் நிலவரம்!ஆட்சி அமைக்க இருக்கும் ஆம் ஆத்மி!

டெல்லித் தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இருக் கட்சிகளுக்கு இடையே மட்டுமே நடந்தது போன்ற முடிவை கொடுத்து வருகின்றன.

டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சில இடங்களைப் பெற்று மூன்றாவது இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் ஆதரவளிக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ம முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. சற்று முன்பு வரை ஆம் ஆத்மி 58 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. பாஜக 12 இடங்களில் முன்னிலைப் பெற்று வருகிறது. காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதன் மூலம் டெல்லி மக்கள் காங்கிரஸை முழுமையாக தங்கள் மனதில் இருந்து தூக்கி வீசிவிட்டார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஷர்ம்ஸ்தா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “ டெல்லி சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி மீண்டும் அழிக்கப்பட்டுவிட்டதை ஒப்புக் கொள்கிறேன். இதில் நானும் எனது பங்கை ஏற்றுக்கொள்கிறேன் ”என்று அவர் கூறியுள்ளார். மேலும் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ‘பாஜக தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம்.  27 இடங்களில், ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையில் 1,000 வாக்குகள் மட்டுமே ஏற்றத்தாழ்வு நிலவுகிறது’ எனக் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் எனும் கட்சியை டெல்லி மக்கள் மொத்தமாகப் புறக்கணித்துள்ளனர் என்பது இந்த தேர்தலின் மூலம் தெளிவாகியுள்ளது.