BJP Congress: காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் 2026 தேர்தல் குறித்தும் ஆளும் கட்சி உரிமை குறித்தும் பேசியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, கோயம்புத்தூரில் அரசியல் களம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் காங்கிரஸ் மிகவும் வலுவாக உள்ளது. அதுவே தமிழகத்தில் என ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது திமுக கூட்டணி வலுவானதாக இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக பெரிய வாக்கு வங்கி வைத்திருப்பது யாராலும் மறுக்க முடியாது, அதே சமயம் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தது அவர்களின் அடிமட்ட தொண்டன் கூட விரும்பவில்லை.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வேண்டாம் எனக் கூறி தனித்துப் போட்டியிட்டுக் கொண்டு தற்பொழுது சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளது. இவ்வாறு கூட்டணி மாற்றத்திற்கு காரணம் ஏன் என்று கேள்வி கேட்கின்றனர். இப்படிப்பட்ட கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது. அதேபோல விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வாக்கு சதவீதம் எப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை?? ஒரு கட்சிக்கு கட்டமைப்பு என்பது மிகவும் முக்கியம்.
இதனால் அவர்கள் முடிவு என்னவாக இருக்கும் என்பது புரியாததாகவே உள்ளது. அதேபோல தான் பாட்டாளி மக்கள் கட்சியும் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவில்லை. அதுமட்டுமின்றி ஆளும் கட்சியாகவும் இல்லாமல், எதிர்கட்சியாகவும் இல்லாமல் இருப்பது தர்மசங்கட்டமாக உள்ளது. இதே போல காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று போஸ்டர் ஒட்டுவது தவறு கிடையாது. ஆனால் இதன் உரிமை அனைத்துக் கட்சிகளுக்குமே இருக்க வேண்டும். விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சி என அனைவருக்கும் இதன் ஆசை என்பது இருக்கும். குறிப்பாக தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸின் நிலைமை மாறிவிட்டது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் தொகுதிகள் போல் காங்கிரஸில் கேட்க முடியுமா?? கூட்டணி தர்மம் என்பது உள்ளது. அதேபோல தமிழகத்தில் தேசிய கட்சி ஆதரவின்றி எந்த ஒரு கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது எனக் கூறியுள்ளார். மேலும் பா சிதம்பரம் பேசிய, பாஜக கூட்டணி வலுமையாக இருப்பதாகவும் அதனை எதிர்கொள்ள இந்தியா கூட்டணிக்கு வலிமை தேவை என கூறியது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என கூறினார்.