DMK: தி.மு.க உடன் கூட்டணியை அமைத்திருக்கும் காங்கிரஸ், தற்போது தமிழக வெற்றிக் கழகத்துடன் சேர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ், தி. மு. க. கூட்டணியில் தொடரும் நிலை ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி வளராது என்ற கருத்து காங்கிரஸ் எம்.பி.க்கல் மத்தியில் நிலவி வருகிறது. இதனை ராகுல் காந்தி- யிடம் முன்வைத்துள்ளனர். எதிர்காலத்தில் தமிழக வெற்றிக் கழகம் தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி, த.வெ.க -உடன் கூட்டணி அமைப்பது நல்லது என்று நினைக்கின்றனர்.
அதனால் ராகுல் காந்தி விஜய்-யை நேரில் சந்தித்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன் வைத்துள்ளனர். இது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். தி.மு.க கூட்டணி தொடர்ந்தால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் 2025 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு அதிக பட்சம் 25 முதல் 30 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும், அது வெற்றி வாய்ப்புக்கு குறைவான தொகுதிகளாகவே இருக்கும் என்று நினைக்கின்றனர்.
இந்நிலை தொடர்ந்தால் தி. மு. க விற்கு காங்கிரஸ் அடிமையாக இருக்கவேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. விஜய்-யுடன் கூட்டணி அமைத்தல் காங்கிரசுக்கு குறைந்தபட்சம் 70 தொகுதிகள் வரை வழங்க வாய்ப்புள்ளது என்றும், அதனோடு சேர்த்து த.வெ.க தேர்தலில் வெற்றி பெற்றால் ராகுல் காந்திக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்படலாம் என்பது காங்கிரஸ் எம்.பி.க்- களின் கருத்து. இது தி.மு.க கூட்டணியில் கிடைக்கும் தொகுதிகளை விட அதிகம்.
இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறுகின்றனர். இந்த சந்திப்பு த.வெ.க விற்கு ஆழமான அடித்தளத்தை அமைப்பதோடு , தி.மு.க காங்கிரஸ் இடையே பெரிய விரிசலை ஏற்படுத்தலாம். த.வெ. க. தலைவர் விஜய் கூட்டணி அமைக்க தயார் என்ற அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே தினமும் அது தொடர்பான சர்ச்சைகள் வந்த வண்ணமாக உள்ளது. இது 2025 தேர்தலில் பெரிய அளவில் மற்றத்தை ஏற்படுத்தலாம்.