ஷாருகான் மகன் வழக்கு, திசை திருப்பும் நோக்கமா?

Photo of author

By Parthipan K

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி, சொகுசு கப்பலில் NCB நடத்திய பரிசோதனையில் ஆர்யன் கான் மற்றும் அவருடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யன் கானுக்கு இன்னும் பெயில் கிடைக்கவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்தது தான் லக்கிம்பூர் கலவரம். உத்திர பிரதேசத்தில் விவசாயிகள் பேரணியின் போது மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் ஏற்றி 8 விவசாயிகள் இறந்தனர்.

தற்போது ஆஷிஷ் மிஸ்ரா காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஆர்யன் கான் போதைப்பொருள் வைத்திருந்ததற்கு எந்த சாட்சியும் ஆதாரமும் இல்லை, ஆனால் ஒருவர் குற்றமற்றவர் என தீர்ப்பாகும் வரை அவர் குற்றவாளி என்பது போதைப்பொருள் தடுப்பு துறையின் கட்டுப்பாடு, லக்கிம்பூர் வன்முறை வழக்கு ஆர்யன் கான் வழக்கு மூலம் திசை திருப்ப படுவது போல் குறிப்பிட்டு இருக்கிறார்.

எப்போதுமே அரசியலில் ஒரு மிகப்பெரிய பிரச்சனை நடக்கும் பொழுது அது சினிமா துறையின் மூலம் திசை திருப்பப்படுவது புதிதல்ல. மக்களாகிய நாம் தன நம் கவனத்தை எங்கு திருப்ப வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.