கூட்டணி விவகாரம் காங்கிரஸ் கட்சி எடுக்கப்போகும் அதிரடி முடிவு! பரபரப்பில் தமிழகம்!

Photo of author

By Sakthi

காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் 18 முதல் 20 தொகுதிகள் வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்படலாம் என்று பேசப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் ராமசாமி போன்றோர் பங்கேற்று இருக்கிறார்கள். திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்ததாவது,

எங்களுடைய தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை இரண்டு தரப்பிலும் நல்லபடியாக நடந்து இருக்கிறது விரைவில் அடுத்தது என்ன செய்யலாம், எவ்வளவு தொகுதிகள் கேட்கலாம் என்பது தொடர்பாக நாங்கள் முடிவு செய்ய இருக்கின்றோம் நாளை அல்லது நாளை மறுநாள் எங்களுடைய முடிவை தெரிவிப்போம் என்று தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை அந்தக் கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர்களிடம் கருத்துக்களை கேட்டு விட்டு அதன் பிறகு திமுக கூட்டணியில் இருக்கலாமா அல்லது வெளியேறலாமா என்று முடிவெடுக்கும் என்று சொல்லப்பட்டது. அதன்படி இன்றைய தினம் காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர்களிடம் கருத்து கேட்க இருக்கிறது. அந்த கருத்துக்களின் அடிப்படையில் தான் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடருமா அல்லது வெளியேறுமா என்று முடிவெடுக்கும் என சொல்லப்படுகிறது.

அந்த விதத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர்கள் இன்றைய தினம் நடத்தப்படும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் எந்தமாதிரியான கருத்துகளை தெரிவிப்பார்கள், காங்கிரஸ் கட்சி எந்த மாதிரியான முடிவுகளை எடுக்கும் என்பது தொடர்பாக தமிழகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

சமீப காலமாகவே காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்படுவது இல்லை என்ற கருத்து உலாவி வருகிறது. அதோடு திமுக பாரதிய ஜனதா கட்சியுடன் ரகசிய உறவில் இருந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கேற்றார்போல அவ்வபோது ஒரு சில சம்பவங்களும் நடந்திருக்கின்றன ஆகவே திமுக காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து கழட்டி விட வேண்டும் என்ற ஒரு முனைப்பில் செயல்பட்டு வருகிறது என்பதே காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

சற்றேறக்குறைய 12 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. இதற்கு இடையில் எவ்வளவோ பிணக்குகள் அந்த இரு கட்சிகளுக்கும் இடையே வந்திருந்தாலும் பெரிய அளவில் அந்த இரண்டு கட்சிகளுக்கும் விரிசல் ஏற்படவில்லை. ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் பொழுது திமுக காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறி இருந்தது. அது காங்கிரஸ் கட்சிக்கு அந்த தேர்தலில் மிகப் பெரிய பலமாகவே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் அடுத்த சில மாதங்களில் பிணக்குகள் தீர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் ஒன்றிணைந்து கொண்டது திமுக. இப்பொழுதும் அதே போன்ற ஒரு சூழ்நிலை உருவாகி இருப்பதாக கருதுகிறார்கள். அரசியல் விமர்சகர்கள் எப்படி இருந்தாலும் இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதுதான் திமுகவின் எதிர்காலமே இருக்கிறது என்று சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.