திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை! உறுப்பினர் பேசிய சர்ச்சை பேச்சு

0
324
#image_title

திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை! உறுப்பினர் பேசிய சர்ச்சை பேச்சு

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் திமுகவுக்கு எதிராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் செயற்குழு கூட்டமானது நேற்று பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கூட்டணி கட்சியான திமுகவுக்கு எதிராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது அங்கு அவர் பேசியதாவது, உள்ளாட்சி பதவிகளான நகராட்சி மற்றும் வார்டு சீட்டுகளை திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கு கொடுப்பதில்லை. இதன் மூலமாக திமுக காங்கிரஸ் கட்சியை அடிமை போல வைத்திருப்பது தெரிகிறது என்று பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர் நாமும் எதிர்க்கட்சியைப் போல திமுகவுக்கு எதிராக செயல்பட வேண்டும். கிராமசபை மற்றும் பூத் கமிட்டி அமைக்க கூட பணம் தருவதில்லை. ஆகவே நாம் அனைவரும் இதை எதிர்த்து போராட்டம் செய்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்று அவர் பேசியுள்ளார்.

Previous articleஇறையாண்மைக்கு எதிராக பிரிவினை பேச்சு! மத போதகர் மீது புகார்
Next articleகள்ளச்சாரயத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் வழங்குவதில் சிக்கல்.. சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!