காங்கிரசின் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

0
169

காங்கிரசின் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸின் எம்எல்ஏவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் ஈவேரா  வயது 46 இன்று காலமானார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இவிகேஎஸ்  இளங்கோவன் இவரது மகன் திருமகன் ஈவேரா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக இருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பி ஏ பொருளாதாரம் படித்துள்ள இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

இன்று காலை திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்ட இவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் 2015 ஆம் ஆண்டு முதல் தமிழக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை தலைவராகவும்  தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும் உள்ளார். இவரின் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவும் இ பி கே எஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் ஈவேரா மறைந்த செய்தியை கேட்டு ஆற்றொண துயரமும் அதிர்ச்சியும் அடைந்தேன். தனது அன்பு மகனை இழந்து வாடும் அண்ணன் இவிகேஎஸ் இளங்கோவனை எப்படி தேற்றுவது என தெரியவில்லை. திருமகன் ஈவேரா மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர் தமிழக காங்கிரஸ் கமிட்டியினர் மற்றும் ஈரோடு மக்கள் அனைவருக்கும் கனத்த இதயத்துடன் எனது ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனக்  கூறியுள்ளார்.

Previous articleஇந்த பகுதிகளுக்கான வாரந்திர சிறப்பு ரயில் தேதி நீட்டிப்பு! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!
Next article#BREAKING : காங்கிரஸ் முன்னாள் தலைவர் மருத்துவமனையில் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமையகம்!