காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா போராட்டம்!! விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம்!!

Photo of author

By Preethi

காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா போராட்டம்!! விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம்!!

கடந்த நவம்பர் மாதம் முதல் விவசாயிகள், மத்திய அரசு அறிவித்த புதிய வேளான் சட்டங்களை திரும்ப பெற கூறி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பத்துக்கும் மேற்பட்ட முறைகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதில் இந்த விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த விவகாரம் நீடித்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

 

இதைத் தொடர்ந்து மத்திய அரசின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்தின் வளாகத்திற்க்கு வெளியே தினமும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்து உள்ளனர். ஆனால் விவசாயிகளின் இந்த திட்டத்திற்கு டெல்லி போலீஸ் அனுமதி வழங்கவில்லை. கொரோனா தோற்று பரவலை காரணம் காட்டி இந்த விவசாயிகளுக்கு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று, இன்று முதல் தினந்தோறும் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர். இந்த போராட்டத்திற்காக டெல்லி சிங்கு எல்லையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களில் விவசாயிகள் ஜந்தர் மந்தர்க்கு செல்ல உள்ளனர். இதற்காக தினம்தோறும் 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் டெல்லி சிங்கி எல்லையில் இருந்து ஜந்தர் மந்தர்க்கு செல்ல உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

 

நாடாளுமன்றம் ஜந்தர் மந்திரில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்காக இன்று தர்ணாவில் இறங்கியது.காங்கிரஸ் எம்.பிக்கள் தாகூர் நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்களை திரும்ப பெறுவது மற்றும் விவசாயிகளின் போராட்டம் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என்று அவை ஒத்திவைப்பு நோட்டீசை வழங்கியுள்ளனர்.
மேலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் மற்றும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலையின் முன்பாக காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அந்த தர்ணாவில் அவர்கள் “விவசாயிகளை காப்பாற்றுவோம்” “நாட்டை காப்பாற்றுவோம்” என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர்.