காங்கிரஸின் முக்கிய புள்ளி திடீர் மரணம்! சோகத்தில் கட்சி தலைமை!

காங்கிரஸின் முக்கிய புள்ளி திடீர் மரணம்! சோகத்தில் கட்சி தலைமை!

கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு மக்களை பெருமளவு பாதித்து.அதன்பின் அதன் தாக்கம் சிறிதளவு குறையவே மக்கள் சில கட்டுபாடுகளுடன் வெளியே நடமாட செய்தனர்.மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்ததும் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றாததால் மீண்டும் கொரோனாவின் 2 வது அலை உருவாக ஆரம்பித்து விட்டது.சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த கொரோனாவின் 2-வது அலைக்கு மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வருகின்றனர்.தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் செலுத்தி வரும் நிலையில் பெருமளவு உயிர் சேதம் நடைபெற்று வருகிறது.ஓர் நாளில் மட்டும் இந்தியாவில் 1000 -கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.அந்தவகையில் பல அரசியல் தலைவர்கள்,திரைப்பட நடிகர்கள்,விளையாட்டு வீரர்கள் என பலர் மரணமடைந்து வருகின்றனர்.

தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் தொடங்கிய போது காங்கிரஸ் தலைவர் மாதவராவ் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதனைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திடீரென்று உயிரிழந்தார்.அதுமட்டுமின்றி பல அரசியல் தலைவர்கள் கொரோனா தொற்று காரணமாக தன்னை தனிமைபடுத்திக்கொண்டு வருகின்றனர்.அவரை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கும் கொரோனா தொற்றானது உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவைச் சேர்ந்த எம்பி ராஜீவ் சாதவ் என்பவருக்கு சென்ற மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால் துரதிஷ்டவசமாக இன்று காலை 9.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மூத்த தலைவரான இவர் மறைவுக்கு எதிர் கட்சியினர் முதற்கொண்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவர் இழப்பால் காங்கிரஸ் கட்சி தலைமை பெரும் சோகத்தில் உள்ளது.

Leave a Comment