ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!!

Photo of author

By Rupa

ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!!

Rupa

ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டங்களாக. காங்கிரசார் தொடர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர்.

இந்த நிலையில், 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் வந்தனர்.

அவர்களை காவல்துறையினர் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தியதால், காவல் துறையினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பே காங்கிரசாரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் காவல்துறையினருக்கும் காங்கிரசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.