கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் – தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி!!

Photo of author

By Sakthi

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் – தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி!!

Sakthi

Congress rule in Karnataka state - President Jagadish Shetter interview!!
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் – தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி!!
நேற்று நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெற்று கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் அவர்கள் கூறியுள்ளார்.
நேற்று அதாவது மே 10ம் தேதி பலத்த பாதுகாப்புடன் கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
இரண்டு கட்சிகளில் யார் வெற்றி பெற்று ஆட்சியமைக்க போகிறார் என்பதில் நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். தேர்தல் முடிந்த நிலையில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்று சில செய்தித்துறை மற்றும் மற்ற நிறுவனங்களால் பொது வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதில் ஒரு சில வாக்கெடுப்பில் பாஜக கட்சியும், ஒரு சில வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்கும் என்று  கருத்து முடிவுகள் வெளியானது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் அவர்கள் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று பேட்டி  அளித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் அவர்கள் “நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று கூறியுள்ளார். நேற்று நடந்த கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே வந்துள்ளது. நேற்று நடந்து முடிந்துள்ள தேர்தலின் முடிவுகள் வரும் 13ம் தேதி வெளியாகவுள்ளது.