காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் அகமது படேல் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய எம்.பி.யுமான அகமது படேல் (வயது 71) தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடந்த அக். 1ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவா் குா்கானில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30 மணியளவில் அகமது படேல் காலமானார்.

இதுகுறித்து அவரது மகன் ஃபைசல் அகமது தனது ட்விட்டர் பக்கத்தில்,

https://twitter.com/mfaisalpatel/status/1331365042592247808?s=20
‘எனது தந்தை அகமது படேல் இன்று (நவ. 25) அதிகாலை 3:30 மணிக்கு காலமானார். ஒரு மாதத்திற்கு முன்பு கோவிட் -19 (COVID19) நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் உறுப்பு செயலிழந்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்தது என்று எனது தந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அனைத்து நலம் விரும்பிகளும் அரசு அறிவுறுத்திய கோவிட் -19 விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சமூக இடைவெளியை எல்லா நேரங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.’

இதையடுத்து அகமது படேலின் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment