அடுத்தடுத்து செய்யப்பட்ட ராஜினாமா! அதிர்ச்சியில் நாராயணசாமி!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டிற்கும் புதுவைக்கும் சேர்ந்து தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத்தீவிரமாக வேலைகளை முன்னெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், புதுச்சேரியில் ஆளும் கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருவது அந்த கட்சியின் தலைமைக்கு மிகப்பெரிய தலைவலியை கொடுத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நமச்சிவாயம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் அவர்கள் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த இரண்டு பேரை அடுத்து நேற்றைய தினம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் புதுச்சேரியில் மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்திருக்கிறார். சபாநாயகர் சிவக்கொழுந்து அவர்களின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியிருக்கின்றார்.

புதுச்சேரி மாநிலத்தில் தீப்பாய்ந்தான் நமச்சிவாயம் மல்லாடி கிருஷ்ணாராவ் கொண்டு தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து நான்காவதாக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்திருப்பது மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் புதுச்சேரியில் இதுவரையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து இருப்பதால் காங்கிரஸ் கட்சியின் தலைமை அதிர்ச்சி அடைந்து இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி புதுவையில் பொறுப்பேற்றவுடன் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடாத நாராயணசாமி முதலமைச்சர் என்று அறிவிக்கப்பட்டார் அதன் பிறகு அவர் போட்டியிட்ட நெல்லிதோப்பு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜான்குமார் தன்னுடைய தொகுதியை விட்டுத்தர இதனை அடுத்து நெல்லிதோப்பு போட்டியிட்டு நாராயணசாமி வெற்றி பெற்றார்.

இதனை அடுத்து காமராஜ் நகர் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாள் அந்த தொகுதி காலியாக இருந்தது. அந்த தொகுதியில் ஜான்குமார் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.