வெற்றிபெற்றது காங்கிரஸ்! அச்சத்தில் பாஜக!
டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் ரோஹினி-சி மற்றும் ஷாலிமார் பாக் எனப்படும் ஆகிய இரண்டு வார்டுகளிலும்,கிழக்கு டெல்லி மாநகராட்சியில் மூன்று வார்டுகலான திரிலோக்பரி,கல்யாணபுரி மற்றும் சவுகான் பேங்கர் ஆகிய வார்டுகளுக்கு மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஷாலிமார் எனப்படும் தொகுதி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.திரிலோக்புரி மற்றும் கல்யாண்புரி ஆகியவை தனித் தொகுதியாக ஒதுக்கப்பட்டது.இன்நிலையில் ஐந்து வார்டுகளில் நான்கு வார்டுகள் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தான் பதவியில் இருந்துனர்.இவர்கள் டெல்லி சட்ட சபையின் போது ,ஆம் ஆத்மி சார்பில் எம் எல் ஏக்களாக தேர்ந்தேடுகபட்டனர்.இதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
ஷாலிமார் பாக்வார்டை சேர்ந்த பாஜக கவுன்சிலர் திலக் ராஜ் கட்டாரிய கடந்த ஆண்டு நடந்த மேயர் பதவி பிரச்சனை காரணமாக தனது பணியை ராஜினாமா செய்தார்.அதற்கடுத்து இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.இந்நிலையில்தான் 4 வார்டுகளில் ஆம் ஆத்மியும், ஒரு வார்டில் காங்கிரசும் முன்னிலையில் இருந்தது.அதன்பின் 10.30 மணியளவில் 2 வார்டுகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகுத்தது.இதற்கடுத்து.11 மணிக்கு மேல் மற்ற இரண்டு வார்டுகளிலும் ஆம் ஆத்மிவெற்றி பெற்றது.
திரிலோகபுரி,கல்யாணபுரி ,ரோஹினி –சி மற்றும் ஷாலிமார் பாக்கில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.சவுகான் பேங்கரில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.எந்த தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறவில்லை.பொருட்கள் விலைவாசி காரணமாக மக்கள் பாஜக கட்சியின் மீது மிகுந்த கோவம் அடைந்துள்ளனர்.அதனால் தான் பாஜக இம்முறை தோல்வியை கண்டுள்ளது.