நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் வெளியீடு குறித்து வெளியான தகவல்

0
315
Connect
Connect

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் வெளியீடு குறித்து வெளியான தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடத்துள்ள கனெக்ட் படம் வரும் 22 -ம் தேதி வெளியாகும் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகை நயன் தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நயன்தாரா பிறந்தந்நாளை முன்னிட்டு கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இதேபோல், இந்த ஆண்டு நயன் தாரா பிறந்தநாள் அன்று மாலை இந்த படத்தின் டீசர் வெளியானது.

வரும் 22-ம் தேதி கனெக்ட் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . மேலும், தமிழில் முதன்முறையாக இடைவேளையில்லாமல் கனெக்ட் உருவாகியுள்ளதாகவும், 99 நிமிடடங்களில் ப்டம் நிறைவடையும் என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

Previous articleநடிகர் அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2 படப்பிடிப்பு தொடக்கம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
Next articleஜல்லிக்கட்டு விவகாரம்: நீதிபதிகளுக்கே அழைப்பு விடுத்து அலப்பறை செய்த தமிழக அரசு! இருந்தாலும் தளபதிக்கு குசும்பு அதிகம் தான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here