ADMK BJP: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதால் மீண்டும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் இந்த கூட்டணி நீண்ட நாள் நீட்டிக்குமா என்பதில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மீது தேவையற்று பாஜக அண்ணாமலை குற்றம் சுமத்தி பேசியதால் இந்த கூட்டணி முறிவு பெற்றது. ஆனால் தற்சமயம் மீண்டும் கூட்டணி அமைத்து புதிய கோட்பாடுகளை வரையறுத்துள்ளனர்.
அதிலும் சில குழப்பங்கள் தான், பாஜக கூட்டணி ஆட்சி என்று ஒரு பக்கம் கூறவே எடப்பாடி அதனை முழுமையாக மறுத்து வருகிறார். அதேபோல பாஜகவுடன் இணை இருக்கும் டிடிவி தினகரன் குறித்து எடப்பாடி விரைவில் பேசுவார் என்று அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி இவை அனைத்திற்கும் மௌனம் காத்து வருகிறார். ஒரு கட்டத்தில் மீண்டும் ஓபிஎஸ் சசிகலா டிடிவி உள்ளிட்டோர் அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.
அப்படி தகவல்கள் வெளியான சமயத்தில் கட்சிக்குள்ளேயும் எந்த ஒரு மோதல் போக்கும் காணப்படவில்லை. தற்போது பாஜக தங்கள் கீழ் கூட்டணி ஆட்சி என கூறவே அதிமுகவிலிருந்து விலகிய அனைவரும் இணைய துடிக்கின்றனர். அதிலும் சசிகலா சுதந்திர தின விழாவிற்கு பொதுச் செயலாளராக இருந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மறுபுறம் ஓபிஎஸ் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் மாற்று கட்சிக்கு சென்று விட்டனர்.
இவையனைத்தும் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளது. இதனால் முதல்வர் வேட்பாளர் பதவி கேள்விக்குறிதான்?? எடப்பாடிக்கு செல்லுமா என்பதில் பெருத்த சந்தேகம் இருக்கிறது. இதில் பாஜகவிற்கு ஒத்துப்போகக்கூடிய வேறு யாரேனும் தலைவர் பதவிக்கு வரலாம். அதிலும் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் இதில் இணைவார்கள் என கூறப்படுகிறது. அந்த வகையில் பாஜக உடன் கூட்டணி வைத்தும் எடப்பாடிக்கு பாதகம்தான்.